உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை மலைநிவந் தன்ன நிலையுயர் மாடத்துங்

குடிகள் தங்காப் பழியொடும் இடிந்து

27

75

வெருப்பேய் சேர எருக்கு முளைத்துப்

பாழ்படு பொல்லா வில்லினும்

போழ்கதிர் விரித்துப் பொலிவதா லெனவே.

(13)

14. தலைமகள் பிரிவாற்றாது புலம்பல்

பொலியும் மதியும் புலிபோலத் தென்றல்

நலியும் நமனானான் நல்வேள் - ஒலிதமிழ்

ஓவா திசைக்குந் திருவொற்றி யொள்வேலான்

மேவான் செயலறியேன் மேல்

(14)

15. அருமைசெய்து அயர்ப்பத் தலைவி கூறல்

மேலான முத்தே திருவொற்றி மேவிய வேலவனே கோலா கலங்செய்து கூடாம லேகல் குறைவுகண்டாய் நூலா வுடைகட்டி யேலாத குன்றினும் நோன்மைமிகுங் கோலா வுயர்குணக் குன்றினுஞ் சென்ற குறிப்பறிந்தே.

5

16. அருணிலையுரைத்தல்

அறிவும் அவாவும் ஒருவழிச் சென்றாங் கொருதிற னின்றிப் பலதிறப் படுமே; குய்கமழ் கறியும் நெய்கமழ் துவையும்

பொன்னிறப் புழுக்கலுங் கன்னல்பெய் பாலுந் தன்னிகர் குழம்பும் பண்ணிய வகையும் மிக்கெழு சுவையின் முக்கனி வகையுங்

கோழரை வாழைக் குருத்தகம் விரித்துப் பால்கெழு தன்மையிற் பலவே றமைத்து, முரவை போகிய முழுவெள் ளரிசி

(15)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/52&oldid=1586789" இலிருந்து மீள்விக்கப்பட்டது