உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

10

மறைமலையம் - 20

15

கைவன் மடையன் அடுதலின் நெய்கனிந்து விரலென நிமிர்ந்த அவையன் மென்பதம் முல்லை முகையென மெல்லிதிற் குவைஇப், புழுக்கலும பிறவும் அளாஅய் விழுத்தக நெய்யுடன் பெய்து மெய்ம்மறந் துண்டாங்

கானா துறைவோர் அளவில ரன்றே; முகிறொடு குடுமியும் முழைகெழு வாயும் அருவி யென்னும் அறுவையும் உடீஇ, யந்திக் காலத்து ஞாயிறொடு பொருது செவ்வா னென்னும் மெய்கால் குருதியுங்

20 கணைதொடு புண்ணின் முகுளித் தன்ன பவளமுஞ் சிதர்ந்த திவளொளி கெழூஉம் அரக்கன் அன்ன பொருப்பின் காட்சியும், மடமான் பிணைகள் கன்றொடு குழீஇக் கான்யாற் றொண்புனல் நிரைநிரை யருந்தக்

25

கானங் கோழி துணைகூப் பெயர்ந்து ஞாயிறு தோன்றுங் காலை யறிவிப்ப நிறங்கெழு தாராக் குறுங்கயம் மருங்கிற் குறுகுறு நடந்து நீந்த வெறிபடு

தளவம் அரும்பி எயிறென விளங்கக்

30 கொன்றை பொன்வீ யுகுப்ப மன்றல் காவதங் கமழுங் காடுகெழு காட்சியுங், கொழுவளை யீன்ற செழுநீர் முத்தஞ் செந்தா மரையின் மிளிர்வன மங்கையர் திருமுகங் குறுவியர் பொடித்தன் மானக்

35 குடம்புரை செருத்தற் றடங்கண் மேதி இல்லுறை குழக்கன் றுள்ளுதோ றொழுகுந் தீம்பான் மாந்திப் பருவரால் உகள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/53&oldid=1586790" இலிருந்து மீள்விக்கப்பட்டது