உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை மலிபூம் பொய்கை மருதக் காட்சியுந்;

தேற்றாப் புலவர் நூற்றிறங் கடுப்ப

40 எழுவாய் ஓங்கி முறைமுறை தேய்ந்து கரைசார்ந் தவியுந் திரையே, கரைதொடுத்து மறுகரை காணா தகன்றுநனி யாழ்ந்து நல்லிசைப் புலவர் செய்யுள் போலப்

29

பல்பொருள் செறித்த கடலே, பொல்லா

45

ஒழுக்கந் தலைவந்த பழிப்புடை யாளரும்

விழுக்குண மேவுவ ரென்பது நலத்தக

முள்ளுடைக் குழையிடைக் கொள்ளைமணம் அவிழ்த்து

வாலிதின் விரிந்த கைதையங் கழியே,

மின்சிதர்ந் தன்ன பொன்சிதர் பரப்பி

50 எரிகிளர்ந் தன்ன விரிபூ ஞாழற்

பொழிலே, யெனுமிவை யெழில்பெறத் தோன்றும்

நெய்தற் காட்சியுங் கண்டு மெய்யென

அறிவு மாழாந்து வாழ்வோரும் பலரே; காண்டகு சிறப்பிற் பாண்டின் மேலால்

55 ஐவகை யமளியுங் கூறுபட வமைத்துக் கால்களைந் தாய்ந்த வான்முகை முல்லை கடிமணங் கமழத் தூஉய் மடிபடு நுரைமுகந் தன்ன தூவெள் ளறுவை செறிவுற விரித்து நறுங்குற டுரைத்த

60 கேழ்கிளர் தேய்வையிற் கோழகில் நெய்யும் புழுகும் மான்மதமுஞ் செழுங்கருப் புரமுங் கொழும்பனி நீரும் வழுவறக் கூட்டி வேரியின் அமைத்த சிவிறியிற் றோய்த்து நிரைநிரை மங்கையர் முறைமுறை யிரட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/54&oldid=1586791" இலிருந்து மீள்விக்கப்பட்டது