உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மறைமலையம் - 20

65

உறங்கும் வாழ்க்கையிற் பிறங்குவோர் பலரே;

70

தந்நலம் பகரும் பொன்விலை மாதர் திவவியாழ் எழீஇ நவைநான் ககற்றி மிடற்றெழு மோசையும் நரம்பிமி ரொலியும் ஒருநெறிச் சென்றாங் கொருநிலை நிகழப்

புள்ளினந் துணைமறந் தொதுங்க வள்ளிய குழைமுகந் தோன்றி வறுமரம் உயிர்ப்ப விழுமிதின் எழூஉம் மிடற்றின் பாடலுங் கொன்றையங் குழலுங் குன்றமர் வேயுந் துருவி யூதும் பொருவி லோசையுஞ்

75 செவிவாய் மாந்திச் சிறந்தோரும் பலரே; பித்திகைக் கொழுநனை முத்தார் முல்லை நறுவிரைத் தாமரை துவர்க்கால் வகுளஞ் சண்பகங் குவளை பொன்மடற் றாழை

கொழுந்தும் மருவுஞ் செழுந்தண் வேரியுந்

80 தொடலை யாக்கியும் விடுபூச் சிதறியுஞ் செண்டும் பந்துங் கொண்டு விளையாடியும் நறும்பொருள் விராஅய் மெய்யிற் றிமிர்ந்தும் வறிதின் வாழும் மக்களும் பலரே; ஐம்பொறி வழிச்சென் றிம்பரின் நுகரும்

85

ஐவகைச் சுவையும் ஒருகாற் காட்டும் மைவிழி மடவார் பொய்படு மின்பத்து மெய்படத் துளங்கும் விழலரும் பலரே, தாமுந் துவ்வாது பிறர்க்கும் ஈயாது வெருவரு பேயென உரவோர் இகழ

90 ஆனா தரும்பொருள் இவறிக் கூட்டி மாணா வாழ்க்கை மக்களுங் கள்வருங் கவர்ந்து செல்ல நிமிர்ந்துவான் நோக்கிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/55&oldid=1586792" இலிருந்து மீள்விக்கப்பட்டது