உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

.

101

இங்கு உன்னிக்கவேண்டுவதொன்றுண்டு. நாயகர வர்கள் எழுதுங்கால் வடசொற்களை மிகக் கலந்தெழுதி னாலும், அவைகளிற் பேசுங்காற் பெரும்பாலுஞ் செந்தமிழ் நடையிலேயே பேசிவந்தார்கள். அதனால், அவர்கள் நிகழ்த்திய ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகள் பலர்க்கும் பெரிதும் பயன்பட்டு உண்மையறிவை விளக்குவ வாயின. அவர்கள் இயற்றிய நூல்களாற் பயன்பெற்றவர் தொகையினும், அவர்கள் ஆற்றிய சொற் பெருக்குகளாற் பயன்பெற்றவர் தொகையே மிகப் பெரிது. சொற்பெருக்குகள் நிகழ்த்துங்காற் பேசிய செந்தமிழ் உரை நடையைப் போல் நாயகரவர்கள் தம்முடைய அரிய பெரிய நூல்களைச் செந்தமிழ் நடையில் ஆக்கியிருந்தால், அவை தழிழ்ப் பேழையிற் பொதிந்து வைத்த விலையிடுதற்கரிய மாணிக்கங் களாய்த் திகழ்ந்திடும். ஆ னால் அத்தகைய பேறு தமிழ் மக்கட்கு வாயாதுபோயிற்று. இது காட்டியவாற்றால், நாயகரவர்கள் தமதிளமைக்காலத்தில் வடசொற்கலப்புமுக்காற் கூறுக்குமேல் உடைய மாயாவாத வைணவ நூலுரைகளைப் பயின்று அவைகளின் நடையைப் போல் தாமும் எழுதப்பழகியதும், அவர் நாற்பதாண்டு எய்தும் வரையில் பழைய தனிச் செந்தமிழ் இலக்கண இ இலக்கிய நூல்கள் அச்சாகி வெளிவராததுமே, அவர் வடசொல் மிகுதியாய் விரவிய உரைநடை நூல்கள் இயற்றுதற்குக் காரணங்களாய் நின்றமை இனிது விளங்கா நிற்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/134&oldid=1587241" இலிருந்து மீள்விக்கப்பட்டது