உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

2. நாயகரவர்கள் சைவசித்தாந்தம் அறிந்தமை

நாயகரவர்கள் தமதிளமைக் காலத்தில் அச்சுதானந்த சுவாமிகள் என்னும் முனிவரரை அடுத்து, அவர்பால் தமி ழிலக்கண இலக்கிய அறிவும், மாயவாத வேதாந்த உணர்ச்சியும் பெற்று, அவர்க்குமிக அணுக்கராய் அன்புமிக்கு ஒழுகி வந்தனர். இவர்கள் தம் ஆசிரியரிடத்து அளவிறந்த அன்புபூண்டு ஒழுகிவந்தமை, இவர்கள் முதன்முதல் இயற்றிய வேதபாஹ்ய ஸமாஜகண்டனம் என்னும் நூன்முகத்தில்,

66

“அச்சுதானந்தன் எனுந்தனிப்பேர் எய்தித்

திணிவளரும் உலகுதித்த திறம்பாடி வல்வினைகள் தீர்ந்துவாழ்வாம்"

எனக் கூறிய குருவணக்கச் செய்யுளானும், அந்நூலின் ஈற்றிற் குருமான்மியவகவல் எனப் பெயர் தந்து அவர் மேலியற்றிய நீண்டதோர் அகவற்பாவில் உளங்கரைந் துரைக்கும் மொழிகளானும் நன்கறியப்படும். அதுவேயு மன்றித் தம் ஆசிரியர் அச்சுதானந்தரின் கையெழுத்தைப் போலவே, நாயகரவர்களுந் தமது தமிழ்க் கையெழுத்தை எழுதிவந்தமையும் இவர்கள்தம் ஆசிரியர்பால் வைத்திருந்த பேரன்பின்றிறத்தை நன்கு புலப்படுத்தாநிற்கும், இவர்களது கையெழுத்தையும், இவர்கள் ஆசிரியர் அச்சுதானந்தரின் கையெழுத்தையும் ஒருங்குவைத்து ஒப்புநோக்க, அவை யிரண்டற்கும் ஒரு சிறு வேற்றுமைதானுங் காணப்படாமை கண்டு எமதுள்ளம் பெரியதோர் இறும்பூதுற்றது. இன்னும், அச்சுதானந்தர் இயற்றிய தியானானுபூதி என்னும் பாமாலைத் திரட்டின் இறுதியில், நாயகரவர்கள் அவ்வச்சுதானந்தராகிய தம் ஆசிரியரின் வரலாற்றை எண்பத்தைந்து தமிழ்ச் செய்யுள்களிற்பாடிச் சேர்த்திருக்கின்றனர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/135&oldid=1587242" இலிருந்து மீள்விக்கப்பட்டது