உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

103

‘தியானானுபூதி' அச்சிற்பதிப்பிக்கப்பட்ட காலம் பிரபவ ஆண்டு பங்குனித் திங்கள் என்பது அதன் முக ஏட்டிற் குறிக்கப் பட்டிருக்கின்றது, அதனால், இற்றைக்கு எழுபதாண்டுகளுக்கு முன்னேமே அந்நூல் பதிக்கப்பட்டமையும், அதன் கட் டம், ஆசிரியரின் வரலாற்றினைச்செய்யுளாகப்பாடிச் சேர்த்த நாயகரவர்கள்

அப்போது

இருபத்திரண்டாண்டுள்ள

இளைஞராயிருந் தமையும் அறியப்படும். அதேகாலத்திற்றான் நாயகரவர்களின்முதல் வழக்குரை நூலாகிய வேதபாஹ்ய சமாஜ கண்டனமும் வெளிப்பட்டது, இருபத்திரண்டாண் டுள்ள இளைஞராயிருக்கையிலேயே இவர்கள் தமிழில் உரை நூலுஞ் செய்யுணூலும் இயற்றி வெளியிடும் அத்துணை அறிவாற்றல் வாய்க்கப் பெற்றிருந்ததனைஉற்று நோக்குங் கால், இவர்கள் அதற்குமுன் மிகச்சிறியராயிருந்த பருவத்தி லேயே தமிழ்ப்புலமை வாய்க்கப்பெற்றிருந்தமையும் நன்கு புலனாகும், அறியாமையிருளாற் கவரப்பட்ட மக்கள் உள்ளத்திற்கு அதனைக் கீழ்ந்து அறிவொளியினைத் தோற்று விக்கவல்ல பெரியார், இறைவன் திருவருளாணையால் இடை ட யிடையே அரியராய் இம்மண்மிசைத் தோன்றுங்கால்,அவர் பெரியரென்பதூஉம், அவரால் அறிவொளி பரவித் துலங்கப் போகின்றதென்பதூஉம் அவரது பிள்ளைமைப்பருவத்தி லேயே அவர் பாற் காணப்படும் அறிவொளித் தோற்றத்தாற் புலனாய் விடுகின்றன. திருஞான சம்பந்தப்பிள்ளையார் தமது மூன்றாம் ஆண்டிலேயே இறைவன்மேல் மிக அழகிய சைப்பாட்டுகள் பாடியருளியதூஉம் சுந்தரமூர்த்தி நாயனார் தாம் இறைவனாற் றடுத்தாட்கொள்ளப்பட்ட இளம்பருவத்தில் அங்ஙனமே மிகச்சிறந்த தேவார இசைப் பதிகங்கள் அருளிச் செய்ததூஉம் அவ்வுண்மை நிகழ்ச்சிக்கு உரிய உயர்ந்த சான்றுகளாகும். ஆங்கில நாட்டில் மிகச்சிறந்த ஆராய்ச்சியறிவினை ஒளிரச் செய்த ஜான் ஸ்டூவர்ட் மில் (Jons Stuart Mill) என்னும் பேராசிரியர் தாம் மூன்றாண்டுள்ள சிறுவராய் இருந்த ஞான்றே தமக்குரிய ஆங்கில மொழி நூல் களைக் கற்கலானதுடன், தமக்கு அயல் மொழியான கிரீக்கையுங் கற்றுவந்தமையும், ஓவியக்கலையாராய்ச்சியில் துறை போகக்கற்றுத் தேனினும்பாகினும் இனிய ஆங்கில உரைநடையில் விழுமிய நூல்கள் பற்பல இயற்றிய இரஸ்கின் (Ruskin) என்னும் உரைநூற்புலவர் பிரானுந் தமது நான்காம்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/136&oldid=1587243" இலிருந்து மீள்விக்கப்பட்டது