உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மறைமலையம் – 21

ஆண்டுக்கு முற்றொட்டே விரிவுரை நிகழ்த்தும் ஆற்றல் பெற்றமையும் அவ்வுண்மை நாட்டும் அயற்சான்றுகளாகும். நாயகரவர்கள் தமது இருபத்திரண்டாம் ஆண்டில் இயற்றி வெளியிட்ட வேதபாஹ்யசமாஜகண்டனம் என்னும் நூலில், இருக்குவேதத்தின் உருத்திராத்தியாயத்தையும், எசுர்வேதத் தின் சதருத்திரீயத்தையும், சாமவேதத்தின் ஏகாதச ருத்திரத் தையும், அதர் வசிகை சுவேதா சுவதரம் என்னும் உபநிடதங் களையும், திருநாவுக்கரையர் தேவாரம், திருமூலர், திருமந்திரம், திருவாசகம், குலசேகர ஆழ்வார் பாடல், இராமலிங்க சுவாமிகள் பாடல், பக்தித்திரயப் பிரகாசிகை, சிவஞான போதம், சிவஞானசித்தியார், பட்டினத்துப் பிள்ளையார் பாடல், ஒழிவிலொடுக்கம், திருக்குறள், சாந்தலிங்க சுவாமிகள் பாடல், தாயுமானசுவாமிகள் பாடல் முதலானவைகளையும் நன்காராய்ந்த முறையில் எடுத்துக் காட்டியிருக்கின்றனர், இத்தனை நூல்களையும், மற்றை இலக்கண இலக்கியக் கருவி நூல்களுடன் ஒருவர் கற்றுப் பேசவும் எழுதவும் வல்லராதற்குக் குறைந்தபடி ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாவது பிடிக்கும். ஆகவே, நாயகரவர்கள் தமது பதினைந்தாம் ஆண்டிலிருந்தே மேற்காட்டிய உயர்ந்த வடநூல் தமிழ் நூல்களை நன்கு கற்று ஆராய்ந்தறிந்தவர்களாக இருந்தாராகல் வேண்டும்.

ஆண்டின் முதிர்ந்தவர்களாலும் எளிதிற் கற்றுணர்தற்கியலாத இவ்வறிவுநூல்களையெல்லாம் நாயகரவர்கள் தமது இளம் பருவத்திலேயே நன்கு கற்றுப் புலமை நிரம்பினராயின், இவரது அறிவின்றிறத்தை என்னென்று சொல்லவல்லேம்! மேற்குறித்த வடநூல் தமிழ் நூல்களேயன்றி, ஆங்கில மொழியுந் தெலுங்கு மொழியுங்கூட இவர் ஒருங்கு சேர்த்துப் பயின்றிருந்தார்கள், இக் காலத்திற் போலக் கல்விகற்றற்கேற்ற ஒழுங்குகள் வாயாத அக் காலத்தில் நாயகரவர்கள் நான்கு மொழிகளைப் பயின்று, அவற்றுள் வடமொழி தென்மொழிகளிற் புலமை மிக்காராய் இளம் பருவத்திலேயே துலங்கினதனை நினைந்து பார்க்குங் கால், இவர்கள் தமதிளமைக்காலத்தில் உயர்ந்த கல்வி கற்பதில் எவ்வளவு விழைவும் எவ்வளவு முயற்சியும் எவ்வளவு அறிவும் உடையவர்களாயிருந்தாராகல் வேண்டு மென்பது நன்கு புலனாகா நிற்கும், மேற்சென்றபிறவிகளிற் பயின்று

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/137&oldid=1587244" இலிருந்து மீள்விக்கப்பட்டது