உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

105

உளந்தூயராகி அறிவு முதிரப் பெற்றோர்க் கன்றி, ஏனை யோர்க்கு இங்ஙனம் இளம்பருவத்திலேயே இயற்கை நுண்ணறிவுங், கல்வி வேட்கையும் உண்டாதல் சிறிதும் இல்லை, நூறாண்டு உயிர் வாழ்ந்துங் கல்லாப்புல்லறிவாளர் எத்தனை பேர்! சில்லாண்டுகளே உயிர் வாழினும் கல்விக் கடற்கோர் எல்லையாய் நின்றாருஞ்சிலர் ஆங்காங்குளர் அல்லரோ! ஆதலால், நாயகரவர்கள் சிறுவராயிருந்த காலந்தொட்டே இயற்கை யறிவிலுங் கல்வியறிவிலுஞ் சிறந்தாராய் வடநூல் தமிழ் நூற் புலமைமிக்கு நூலெழுதும் ஆற்றலும் விரிவுரை நிகழ்த்தும் ஆற்றலும் ஒருங்கே பெற்று விளங்கலானது, அவர்கள் பண்டைப் பிறவிகளிற் பயின்ற பயிற்சியின் விழுமிய பயனேயாம் என்க.

இனி, நாயகரவர்கள் வேதபாஹ்ய சமாஜ கண்டனம் இயற்றி வெளியிட்டஞான்றும், தம்மாசிரியர் அச்சுதானந்தர் பாடிய தியானானுபூதி என்னும் பாமாலைத் திரட்டின் ஈற்றில் அவரது வரலாற்றை 85, செய்யுட்களிற் பாடிச் சேர்த்த ஞான்றும் ‘சோமசுந்தரன்’ என்னும் பெயர் பூண்டிருந்தனர், தாம் பாடிய ஆசிரியர் வரலாற்றின் ஈற்றில், “இது சோமசுந்தர அடியவர் இயற்றியது” என்று குறிக்கப்பட்டித்தலால் இவ் வுண்மை அறியக் கிடக்கின்றது. எனவே, தம் அன்னையார் வைத்த ‘அரங்கசாமி' என்னும் பெயர் இவர்கள் இருபத் திரண்டாண்டு எய்துதற்கு முன்னமே மாற்றப்பட்டமை உணரப்படும். இவர்கட்குப் பிள்ளைமைப் பருவத்தில் இடப் பட்ட‘அரங்கசாமி' என்னும் பெயர், இவர்கள் அச்சுதானந்த சுவாமிகளையடுத்துத் தீக்கை பெற்றபோது எடுக்கப்பட்டுச், சோமசுந்தரன் என்னும் பெயர் இவர்கட்குச் சூட்டப்பட்டமை, இவர்கள் இயற்றிய ‘குதர்க்கவாத விபஞ்சிநி’ என்னும் நூலிலே காணப்படுங் குறிப்பொன்றால் நன்கு துணியப்படும்.

இனி, நாயகரவர்கள் 'வேதபாஹ்ய சமாஜ கண்டனம்’ இயற்றி வெளிப்படுத்திய காலத்திற், சங்கராசாரியார் கைக் கொண்ட மாயாவாத வேதாந்த மதத்தைப் பற்றியிருந்தமை, அதன்கண் இவர்கள் ‘பரமகுருவணக்கம்' எனப் பெயர்தந்து பாடியிருக்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/138&oldid=1587245" இலிருந்து மீள்விக்கப்பட்டது