உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மறைமலையம் – 21

“சிற்பரகுரு வெம தற்புத சங்கரர்

பொற்பத மலர்தொழு துற்பவமாற்றுதும்”

என்னும்

நன்குணரப்படும்.

செய்யுளால் இவர்கட்குக் குருவான அச்சுதானதருந்தாம் பாடிய ‘தியானானுபூதி' முதலிற் சங்கராசாரியாரையே தமக்குப் பரமகுருவாகக் கொண்டு பாடியிருக்கின்றனர். அதுவேயுமன்றி, அவர் தமது மாயாவாதக் கொள்கைக்கிசைய "ஹரிநாம ஸங்கீர்த்தநம்" எனப்பெயர் தந்து பத்துச் செய்யுட்கள் நாராயணன் மேற்பாடி வழுத்தி யிருப்ப தொடு, தாம் பற்றிய மாயவாதக் கொள்கைகளையும் இடையிடையே இயைத்துப் பாடியிருக்கின்றனர். அங்ஙனமே நாயகரவர்களுங் குலசேகர ஆழ்வார் பாடல்களை மேற் குறித்த கண்டன நூலில் எடுத்துக் காட்டியிருப்பதுடன், திருமங்கையாழ்வார் வழிப்பறி கொள்ளை செய்ததனையுஞ், சங்கராசாரியார் கட் குடித்ததனையும் அதன்கண் உயர்த்துப் பேசியிருக்கின்றனர்.

என்றாலும், நாயகரவர்களும் அவர்களின் ஆசிரியர் அச்சுதானந்தரும், அந்நாளிற் றழீஇய மாயவாத வேதாந்தத் திற்கும், பார்ப்பனர் தாங்கைக் கொள்ளும் மாயாவாத வேதாந்தத்திற்கும் வேற்றுமைபெரிதுளது. பார்ப்பனர் பிரமத்தைத் தவிர ஏனையவெல்லாம் பொய்ப்பொருள்கள் என்று சொல்லளவிற் சொல்லிக் கொண்டாலுந், தாம் மற்றை மக்கள் எல்லாரையும்விட உயர்ந்தவரென்பதனைப் பொய் யென்று கொள்ளமாட்டார், தமது கொள்கைப்படி ஆரிய மறையுந்தமிழ் மறையும் தமக்கு ஒருங்கே பொய்யாகல் வேண்டுமாயினுந், தமக்குரியவாகக் கொள்ளும் மறையே இறைவன் அருளிச் செய்த அல்லது னோடொப்ப நின்று தனித்து நிலவுந்தனிச் சிறப்பு வாய்தனவாகுமெனவுந், தமிழ்மறையோ அங்ஙனம் ஆகாமல் மக்களாற் செய்யப்பட்டுத் தம்மின் இழிந்தசூத்திரர் மட்டுமே ஓதுதற்குரியனவாகுமெனவும், இறைவனுக்குத் திருக்கோயில் களில் வழிபாடு ஆற்றுங்கால் தம்மவரால் ஓதத்தகுவன ஆரிய வேதங்களேயல்லால் மற்றைத் தமிழ்மறைகள் அல்ல

ஆரிய

றைவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/139&oldid=1587246" இலிருந்து மீள்விக்கப்பட்டது