உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

107

வெனவுஞ், சமய ஆராய்ச்சி செய்யுங்கால் மேற்கோளாகக் கொண்டு பொருள் முடிவு காண்டற்குரியன ஆரிய நூல்களே ஆகுமன்றித் தமிழ் நூல்கள் ஆகாவெனவுங் கொள்ளாநிற்பர்; அதுவேயுமன்றித், தமது கோட்பாட்டிற் கிசையத்திருநீறு, சிவமணி, காவியாடை முதலானவைகளைப் பொய்யென்று கருதிக் கழிக்கவேண்டுவதிருக்க, அவைகளை அணிந்து காண்டு, திருமாலையுந் திருமாலின் பிறவிகளாகக் கருதப்படுங் கண்ணனையும், இராமனையுமே எந்நேரமும் வாழ்த்துவதும் வணங்குவதுஞ் செய்வர்; அதுமட்டுமோ, கண்ணனும் இராமனும் பார்ப்பன தெய்வம், சிவன் சூத்திர தெய்வமென்றும் இழித்துப் பேசா நிற்பர். பார்ப்பனர் கைக்கொண்ட மாயாவாத வேதாந்தம் அவர் தஞ் சொல்லிலுஞ்செயலிலும் இங்ஙனம் முரண்பட்ட நிலை யினதாய் இருக்கப் பார்ப்பனரல்லாத தமிழறிஞர் கைக் கொள்ளும் மாயாவாத வேதாந்தமோ அவர் தஞ்சொல்லி லுஞ் செயலிலும் வேறொரு நிலையினதாய்க் காணப் படுகின்றது.

மாயாவாதம் நுவலுந் தமிழ்க்குழுவினர் மறுமை மற்றையவெல்லாம்

வழக்கிற் பிரமத்தைத் தவிர

பாரா

இல்

பொருள்கள் எனக் கரையினும், இம்மை வழக்கில் எல்லாம் மெய்யெனக் கொண்டு எல்லா மக்களையும் ஒத்த நிலையில் வைத்துச் சாதிவேற்றுமை பாராட்டாது ஒழுகுவர்; ஆரியவேதங்களை உயர்த்துப் பாராட்டுதல் போலவே சைவ சமயாசிரியர் அருளிச் செய்த தேவார திருவாசங்களையும் அவற்றோடு ஒத்த நிலையில் வைத்துச் சிறந்தெடுத்துக் கொண்டாடுவர்; இறைவனை வழிபடுங்காலங்களில் ஆரிய மறைகளை ஓதுதல் போலவே தமிழ்மறைகளையும் ஓதா நிற்பர்; அங்ஙனமே சமய ஆராய்ச்சி செய்யுங்காலங்களிலும் அவ்விருவகை மறைகளையும் மேற்கோளாகக் கொண்டு பொருள் உண்மை தெளியா நிற்பர்; அஃதல்லாமலுந், திருநீறு சிவமணி காவியாடை முதலான சிவபிரான் திருக்கோல அடையாளங் களை மெய்யெனக் கொண்டு சிவபிரானுக்கே வழிபாடு ஆற்றா நிற்பர், சிவபிரானையே முழுமுதற்கடவுளாக வைத்து அங்ஙனம் வணங்கிவரினுந், திருமாலை இகழாது

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/140&oldid=1587247" இலிருந்து மீள்விக்கப்பட்டது