உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மறைமலையம் – 21

அவற்கும் வணக்கவுரை கூறா நிற்பர். து மாயா வாதவேதாந்தழீஇய தமிழறிஞர் செயலாகும். இஃது இவரது செயன்முறையாதல், நாயகரவர்கள் மாயா வாத வேதாந்த வழியராய் நின்றதமதிளமைக் காலத்தில் இயற்றி வெளியிட்ட வேதபாஹ்யசமாஜ கண்டனம் என்னும் நூலினாலும், இவர்தம் ஆசிரியர் அச்சுதானந்த அடிகள் பாடிய தியா னானுபூதி என்னும் பாமாலைத் திரட்டினாலும் நன்கறியப் படும். நாயகரவர்கள் மேற்காட்டிய நூலில் சைவ சமயாசிரியர் நால்வரையும் அவரருளிச் செய்த தேவார திருவாசகங் களையும், அங்ஙனமே ஆரிய வேதோபநிடதங்களையும், பிற்காலத்திருந்த தாயுமான சுவாமிகள் இராமலிங்க சுவாமிகள் முதலான பெரியார் பாடிய பாடல்களையும் மொழி வேற்றுமை சாதிவேற்றுமை சிறிதும் பாராது மேற்கோளாக எடுத்துக்காட்டியிருப்பதுங், கள்வர் குலத்திற் பிறந்த திருமங்கையாழ்வாரையும் பார்ப்பனக் குருவான சங்கரா சாரியாரையும் அங்ஙனமே சாதி வேற்றுமை சமய வேற்றுமை கருதாது ஒக்கவைத்துப் பாராட்டியிருப்பதுந், திருநீறு முதலான சிவவடையாளங்கள் திருக்கோயில்கள் இறைவன் திருவுருவங்கள் என்னும் இவற்றின் உண்மைகளை அங்ஙனமே சிறந்தெடுத்தாராய்ந்து நிறுவியிருப்பதுஞ், சிவபெருமானையே முழுமுதற் கடவுளாகச் சிறந்தெடுத்துப் பகர்தலொடு திருமாலையும் இகழாமல் வணங்குகவெனக்

கூறியிருப்பதுமெல்லாம் நெஞ்சிற் பதிக்கற்பாலனவாகும்.

மேலும், நாயகரவர்கள் பார்ப்பனர்க் குகந்த மாயாவாத வேதாந்தத்தை அந்நாளிற் றழுவி நிற்பினும், பார்ப்பனர்க் காகாத சைவ சமயத்திலுஞ் சைவசமய ஆசிரியர்களிடத் திலும், அளவிறந்த காதல் வைத்திருந்தார்களென்பது, அவர்கள் அக்காலத்தியற்றி வெளியிட்ட வேதபாஹ்ய சமாஜகண்டனம்' என்னும் நூலை நூலை ஒரு சிறிது நோக்கு வார்க்கும், நன்கு விளங்கும். அதனோடு, "யாமே பிரமம்' என்னும் னும் பார்ப்பனரின் மாயாவாதக் காள்கையில், அப்போதே நாயகரவர்கட்கு வெறுப்புத்தோன்றலானமை

“பன்முகச் சமயநெறி படைத்தவரும் யாங்களே கடவுள் என்றிடும் பாதகத்தவரும் வாததர்க்கமிடு படிறருந்தலைவணங்கிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/141&oldid=1587248" இலிருந்து மீள்விக்கப்பட்டது