உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

109

என்னுந் தாயுமான அடிகளின் திருப்பாட்டை அவர்கள் அந்நூலின் கண் எடுத்துக்காட்டியிருப்பதுகொண்டு உய்த் தறியப்படும். இதனால், தம்மாசிரியர் அச்சுதானந்தர் பால் மாயாவாத நூல்களை இவர்கள் பாடங்கேட்டு ஆராய்ந்து வருகையிலேயே அந்நூற்கொள்கைகள் பொருத்துமாறு யாங் ஙனம்? என வினாவி, அதற்கேற்ற விடை பெறாமையின்,வரவர அவற்றின் கண் அருவருப்புக் கொண்டு சைவ சமய நூல் களையே மிகுதியாய்ப் பயில லாயினரென்பதூஉம் புல னாகின்றது. எவர் எதைச் சொல்லினும் அதை அங்ஙனமே ஒப்புக் கொள்வது நாயகரவர்கட்கு இயற்கையன்று, ஒருவர் ஒன்றைச் சொன்னால், அதனைப்பற்றிப் பலவகையான வினாக்களை எழுப்பி அதனை முற்றுமாராய்ந்து தமக்குப் பொருத்தமாகக் காணப்படுவதனையே ஏற்றுக் கொள்வது அவர்கட்கு வழக்கமாய்விட்டது. டது. அதனால், அவர்கள் பால்நெருங்கிய தொடர்புடையாருங்கூட அவர்களிடம் ஒன்றைச் சொல்ல மிகவும் அஞ்சுவர், இதனை யாம் பலகாலும் நேரேயிருந்து பார்த்திருக்கின்றேம், சிற்சிலகால்யாமும் அவர்களிடம் சிற் சிலவற்றைப்பற்றி உரையாடியக்கால், அவர்கள் அவையிற்றின்மேல் நிகழ்த்திய நுட்ப வினாக்கள் பலவற்றிற்குப் பொருந்த விடை சொல்லல் இயலாமல் இடர்ப் பட்டதுண்டு. ஆனாலும் அவர்கள் எளியேம் மீது வைத்த அருட் பெருக்கினால் தாமே அவை தமக்குத் தக்கன பகர்ந்து எமது டர்ப்பாட்டை நீக்கியதுமுண்டு. ஆகவே, நாயகரவர்களைக் காணவரும் அறிஞர்கள் அவர்களின் அறிவின் நுட்பத்தையும் ஆழத்தையும் உணர்ந்து, அவர்கள் சொல்வனவற்றைக் கேட்டபடியாய் இருப்பார்களே தவிரத், தாம் ஏதுந்துணிந்து அவர்களைக் கேளார். இப்பெற்றியதான நுண்ணறிவு வாய்ந்த இவர்கள் தம்மாசிரியர்பால் மாயாவாத நூற்பொருள்களை ஆராய்ந்து வந்த அவ்விளமைக் காலத்தில், அவற்றின் கண் எவ்வளவு தடை நிகழ்த்தி அவர்களை நெருக்கினாராகல் வேண்டும்!

இங்ஙனமாக மாயாவாத வேதாந்தக் கோட்பாடுகள் தமதறிவுக்குப் பொருத்தமாகக் காணப்படா தொழியினும், அவற்றிற்குமேற் பொருத்தமானதொன்றை எடுத்துக்காட்டு வார். இல்லாமையின். நாயகரவர்கள் இருபத்திரண்டாம் ஆண்டுக்குப் பிற் சிறிதுகாலம் வரையில் உண்மையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/142&oldid=1587249" இலிருந்து மீள்விக்கப்பட்டது