உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

மறைமலையம் – 21

அவனுடைய பற்களைத் தகர்த்தனர். தேவர்கள் அப்போது நடுக்கமுற்றுச் சங்கரனை நிலத்தே கிடந்து பணிந்தனர். அதனாலும் அவன் சினம் அடங்கானாய்த், தனது வில்நாணில் நன்கு தீட்டி மிளிரும் ஒரு கணையினைத் தொடுத்தனன். உருத்திரப்பெருமானின் உருத்திரப் பெருமானின் வரம்பிலாற்றலைக் கண்ட தேவர்களும் முனிவர்களும் பெருந்திகில்கொண்டு, அவனது சீற்றத்தைத் தணிப்பான் வேண்டிக் கூப்பிய கையினராய்ச் ‘சதருத்ரீயத்'தைச் சொல்லி அவனைத் தொழுதனர். உருத்திரனும் தேவர்களது வழுத்துரையினைச் செவிமடுத்து உளம் உவந்தனன். அத் தேவர்களுந் தாம் வேட்ட வேள்விப் பலியிற் சிறந்த ஒரு பங்கினை அவற்கு அளித்து, அச்சத்துடன் அவனையே அடைக்கலமாக அடைந்தனர். அதன்பிற் பெருமான் உளம் உவந்து அவ் வேள்வியினைச் சீர்திருத்தி, அதன்கண் அழிவுண்டவர்களையெல்லாம் மீள உயிர்ப்பித்து முன்போல் இருக்க அருள் செய்தனன்.”

வ்வாறு, தருமபுத்திரனான உதிட்டிரனுக்குக் கிருஷ்ண பகவான் எடுத்துக் கூறிய மெய்யுரையாற் சிவபெருமானே வேள்வி முதல்வனாதலும், அவனை வழுத்தாது செய்யும் எத்தகைய வேள்வியும் பயன்றராது அழிதலுடன், அவ் வேள்வியினை ஆற்றுவோரும் அழிந்துபடுதலுந் தெற்றென விளங்குதல் காண்க.

6

L

அற்றாயினும், மாபாரதத்திற் போந்த கண்ணனது அறிவுரையில் விஷ்ணுவும் பிரமாவும் நுவலப்படாமையின், அவ்விருவரும் உருத்திரனிலும் மேலான கடவுளரெனவும், அவ்விருவரும் உருத்திரனால் ஒறுக்கப்படுதற்கு எளியரல்ல ரெனவுங் கொள்ளாமோ வெனிற்; கொள்ளாம்; என்னை? பழைய வேதநூல்களையும் பிராமணங்களையும் ஆழ்ந் தாராய்ந்து பாராதவர்களே அங்ஙனம் உரைப்பரன்றி, அவற்றைத் தீர ஆராய்ந்து பார்த்து, விஷ்ணுவும் பிரமனும் அப் பழைய வேதநூல்களிற் சிறந்த தெய்வங்களாக எடுத்துச் சொல்லப்படாமையினாலேயே, அந் நூல்களை யொட்டித் தக்கன் வேள்வியினைக் கூறிய மாபாரதமும் அவ்விருவரையும் அங்கு ஒரு பொருட்டாக வருவித்து வைத்து உரையாதாயிற் றென்று அதன் உண்மை கண்டவர் அங்ஙனம் உரையாராக லினென்க. இருக்கு முதலான பழைய வேதநூல்களிற், பின்றைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/217&oldid=1587324" இலிருந்து மீள்விக்கப்பட்டது