உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

சோமசுந்தர நாயகர் வரலாறு

185

காலப் புராண விஷ்ணுவைப் பற்றிய குறிப்புச் சிறிதுமே காணப்படவில்லை. இருக்குவேதத்தில் விஷ்ணுவென்னும் பெயரால் அழைக்கப்பட்டவன் பகலவனே யல்லாமல் மாயவன் அல்லன். பகலவன் காலை நண்பகல் மாலை என்னும் மூன்று பொழுதுகளிலும் இயங்கும் இயக்கத்தினையே விஷ்ணு மூன்றடியால் உலகினை அளப்பதாக இருக்குவேதம் நுவலுகின்றதென அந்நூலுக்கு உரை வகுத்த பழைய உரை யாசிரியரான அவுர்ணவாபர் கூறுகின்றனர். சாகபூணி என்னும் உரையாசிரியர், விஷ்ணுவென்னுஞ் சொல் நிலவுலகத்தே காணப்படுந் தீ வடிவினையும், வானின்கட் டோன்றும் பகலவனையும், இடைவெளியிற் காணும் மின்வடிவினையும் உணர்த்தா நிற்கின்றதென உரைக்கின்றனர். வேதநூல்களுக்கு ‘நிருக்தம்’ எழுதிய யாஸ்காசாரியாரும் அப் பழைய உரைகாரர் இருவர் கருத்தினையுந் தமது நூலுள் (12, 19) நன்கெடுத்துக் காட்டி, விஷ்ணுவென்னுஞ் சொல் ஒளிவடிவினையன்றிப் பிறிதெதனையும் உணர்த்தாமை நன்கு தெளிவித்தார். இனி, வேதம், பிராமணம், உபநிடதம், இதிகாசம், புராணம் முதலான வடமொழிநூல்களை எழுத்தெண்ணி யாராய்ந்த ஆங்கிலப் பேராசிரியரான மியூர் (Dr. J. Muir) என்னுந் துரைமகனார் தாம் அந் நூல்களை ஆழ்ந்தாராய்ந்த ஆராய்ச்சியின் முடிபாக விஷ்ணுவைக் குறித்தெழுதிய கருத்துரையினை மொழிபெயர்த்து வரைகின்றாம்:

ஈண்டு

“முற்சென்ற பக்கங்களில் எடுத்துக் காட்டப் பட்டிருக்கும் மேற்கோளுரைகளால், இருக்கு வேதத்திலேனும் பிராமணங் களிலேனும் விஷ்ணு (மாயவன்) ஒரு முழுமுதற் கடவுளாக எண்ணப்படவில்லையென்பது தெற்றென விளங்கா நிற்கின்றது. இப் பழைய நூல்களில் அவர் தேவர்களில் ஒருவராக மட்டுங் கருதப்பட்டிருக்கின்றனரே யல்லாமல் மற்றையோருக்கு மேலானவராகக் கருதப்படவே யில்லை. நிருக்தத்திலிருந்து (12, 19) யான் எடுத்துக் காட்டியிருக்கும் மேற்கோளுரைகளால்; யாஸ்காசாரி யாராவது, அவரால் எடுத்துக் காட்டப் பட்டவரும் வேதங்களுக்கு வேதங்களுக்கு உரைகள் வகுத்த பழைய ஆசிரியருமான சாகபூணி, அவுர்ணவாபர் என்பவர்களாவது இந்திய தேவர் குழாத்தவர்களைவிட உயர்ந்த ஒரு நிலையினை விஷ்ணுவுக்குக் கொடுக்கவில்லை யென்பது நன்கு புலனாகா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/218&oldid=1587325" இலிருந்து மீள்விக்கப்பட்டது