உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

மறைமலையம் - 21

நிற்கும்.” (Dr. J. Muir's Original Sanscrit Textsi Vol. IV, (1873) p.

156.

இங்ஙனம் வேதநூல்களை முற்றும் ஆராய்ந்து நடுநிலை ாழாது முடித்துக் முடித்துக் கூறிய ஆங்கிலப் பேராசிரியரின் மெய்யுரையால் வேத காலத்தில் விஷ்ணு ஓர் உயர்ந்த தேவராகக் கருதப்படாமை உறுதியாகப் பெறப்படுகின்ற தன்றோ? மேலும், வேதகாலத்தை யடுத்துப் பிராமணங்கள் தோன்றிய காலத்திலும் விஷ்ணு ஓர் உயர்ந்த கடவுளாகக் கொள்ளப்படாமை காட்டுதும்: விஷ்ணு தேவர்களின் உதவியால் தான் பெற்ற வெற்றியினைப் பொதுவாகக் கருதாமற் றனக்கே யுரியதாகக் கருதி இறுமாந்து நாணேற்றிய தனது வில்லின் மேன்முனையின்மேல் தனது மோவாயினை அழுத்திக்கொண்டு நிற்ப, அதுகண்ட மற்றைத் தேவர்கள் செருக்குற்ற அவனைக் கொல்வான் வேண்டி எறும்புகளை ஏவ, அவை அவ் வில்லின் அடியிற் பூட்டப்பட்ட நாணைக் கடித்து அறுக்கவே, அவ் வில்லின் மேன்முனை மிக்க விசையுடன் நிமிர்ந்து, அவனது தலை அறுபட்டுத் தொலைவே சென்று விழச் செய்தது. என்னும் இச் செய்தி ‘சதபத பிராமணத்திலும்’ (14, 1, 1, 1) ‘தைத்திரீய ஆரண்யகத்திலும்’ (5, 1, 1-7), ‘பஞ்சவிம்ச பிராமணத்திலும்’ (7, 5, 6) நன்கெடுத்து நுவலப்படுகின்றது. விஷ்ணு ஓர் உயர்ந்த தேவனாகவாவது, முழுமுதற்கடவுளாக வாவது இருந்தால் அங்ஙனம் அவன் தலையறுபட்டு வீழ்தல் ஆகாமையாற், பழைய காலத்தில் விஷ்ணு ஒரு சிறந்த தேவனாகத் தானுங் கொள்ளப்படவில்லை யென்னும் உண்மை உள்ளங் கை நெல்லிக்கனிபோல் தெள்ளிதின் விளங்கா நிற்குமென்க.

இனி, நான்முகனாகிய பிரமாவும் ஓர் உயர்ந்த கடவுள் அல்ல னென்பதூஉம் வேதநூல்களால் நன்கறியக் கிடக்கின்றது. பிரமன் தான் படைத்த தன்மகள் சரசுவதி மிக அழகியளாய் இருத்தல் கண்டு அவள்மேற் பெருங்காமங் காண்டு அவளைப் புணர்ந்தனன். அதனைக் கண்டு அவன்மேற் சினங்கொண்ட தேவர்கள், தன்மகளைப் புணர்ந்து தகாத செய்த நான்முகனை ஒறுக்கும்படி உருத்திரப்பெருமானை வேண்ட, அவர் அவனைப் பாசுபதக் கணையாற் குத்தி ஒறுத்தனர். என்னும் இச் செய்தி 'சதபத பிராமணத்திலும்' (1,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/219&oldid=1587326" இலிருந்து மீள்விக்கப்பட்டது