உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

187

7, 4, 1), 'ஐதரேய பிராமணத்திலும்,’ ‘மற்ச புராணத்திலுங்’ கூறப்பட்டிருக்கின்றது. இதனால், நான்முகன் முழுமுதற் வுளாகாமையும், அவன் சிவ பிரானால் ஒறுக்கப் பட்டமையும், அவன் தேவர்களில் ஒருவனே யாதலும் மிகப் பழைய வேத நூல்களிலேயே பெறப்படுதல் காண்க.

கட

ங்ஙனமாக, விஷ்ணுவும் பிரமனுந் தேவர்களுட் சிறந்த வராகப் பழைய வேதகாலத்துச் சான்றோர்களாற் கொள்ளப் படாமையின், தக்கன் வேட்ட வேள்விக் களத்தில் அவர்களிரு வரையும்பற்றிய செய்தி ஏதும் பழைய வேதநூல்களிற் குறிக்கப்பட்டில தென்றறிந்துகொள்க. பழைய வேதநூல் களிலெல்லாம் உருத்திர சிவத்தின் முழுமுதற் கடவுட் டன்மையே நன்கெடுத்துக் காட்டப்பட்டிருத்தல் மேற்போந்த வேதநூன் மேற்கோள்களால் இனிது விளங்காநிற்குமென்பது.

இனி, வேதநூல்களுக்குப் பல்லாயிர ஆண்டு பிற்பட்டுச் சைவ வைணவ மதங்கள் தோன்றியகாலையில், அம் மதங்களை மேற்கொண்ட குருக்கண்மார் தத்தங் கடவுளரை உயர்த்தல் வேண்டிப் படைத்தெழுதிய சைவ வைணவ புராணங்களில் மட்டுமே தக்கன்வேட்ட வேள்வியில் விஷ்ணுவும் பிரமனும் வந்திருந்த செய்தி புதிதுபுனைந்து நுழைக்கப்பட்டிருக்கின்றது. அதுவேயுமன்றி, வேதநூல்களுள் எல்லாவற்றிற்கும் மிக முந்தியதும் மிகப் பழையதுமான இருக்குவேதம் (1, 43,1),

66

காதபதிம் மேதபதிம் ருத்ரம் ஜலாஷபேஷஜம் தத்ஸம்யோ: சம்நம் ஈமஹே

ய: ஸுக்ர: இவசூர்யோ ஹிரண்யம் இவரோசதே ஸ்ரேஷ்டோ தேவாநாம் வசு:

என்னும் மந்திரத்தால், “பாட்டுகளுக்குத் தலைவரும், வேள்வி களுக்குத் தலைவரும், நோய்தீர்க்கும் மருந்துகளை வைத்திருப்ப வரும் ஆன உருத்திரமூர்த்தியை, அவர்தமது இன்னருளைப் பெறும்பொருட்டு நாடுகிறோம்: பகலவனைப்போற் பேரொளி யுடன் விளங்குபவரும், பொன்னைப்போல் திகழ்பவரும், எல்லாத் தேவர்களினுஞ் சிறந்தவரும் வரம் அளிப்பவருமான அவர்பால் இதனைப் பெறவேண்டுகிறோம்" என்று சிவபிரானை முழுமுதற் பெருங்கடவுளாகவைத்து வழுத்தியிருக்க, மதவெறிபிடித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/220&oldid=1587327" இலிருந்து மீள்விக்கப்பட்டது