உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

மறைமலையம் – 21

பிற்காலத்தவர்கள், கடவுளர் அல்லாத விஷ்ணு பிரமன் என்னும் இருவரோடு உருத்திரப் பெருமானையும் ஒன்றுசேர்த்து, அம் மூவரையும் மும்மூர்த்திகளாக்கிப் புராண கதைகள் பலவற்றைப் படைத்து மதச் சண்டைகளைப் பல்க வைத்துத் தீவினைக்காளா யினர். இதுகாறும் விளக்கியவாற்றால் முழுமுதற் கடவுளாகிய சிவபிரானே வேள்விகளுக்குத் தலைவராயிருந்து அருள் செய்பவ ரல்லாமல் முதற்கடவுள் அல்லாத மாயவனும் நான்முகனும் யஞ்ஞபதிகளாயிருந்து அருள்செய்யமாட்டுவார் அல்லரென நாயகரவர்கள் எடுத்துக்காட்டிய உண்மை அறிஞர்கள் உள்ளத்திற் பதிக்கற்பாலதாம் பெருமாட்சி யுடையதாதல் கண்டுகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/221&oldid=1587328" இலிருந்து மீள்விக்கப்பட்டது