உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189

14. சிவநின்மாலியம்

இனிச், சிவபிரானுக்குப் படைத்த பண்டங்களைத் தூயராயிருப்பவர்கள் நுகர்தலாகாதென்றும், அவற்றைத் தூயர் அல்லாதவர்களே நுகர்தற்குரியரென்றும் வசைகூறிய வைணவருரை பொருந்தாப் பொய்யுரையாதலை நாயகரவர்

கள்

காட்டுவான் புகுந்து, "சிவபிரானுக்குப் படைத்த உணவையே அருந்தல் வேண்டும், உருத்திரனுக்கு ஏற்பித்த நீரையும் பாலையுமே பருகல் வேண்டும், சிவபெருமானுக்குச் சார்த்திய மணப்பொருள் மலர்களையே அணிந்துகொள்ளல் வேண்டும்” என்று கட்டளையிட்ட ஜாபால உபநிடதத்தையும், அதனைத் தழீஇக் கூறிய 'இலிங்க புராண' ‘பிரமாண்டபுராண உரைகளையும் மேற்கோள்களாக யிருக்கின்றனர்.

எடுத்து

விளக்கி

மேலும், உருத்திரப்பெருமானுக்குப் படைத்தவைகளைத் தூயராயிருப்பவர்களே நுகரற்பாலரன்றித், தூயர் அல்லாத வர்கள் நுகரற்பாலரல்லரெனக் காமிகாகமமும் சைவ புராணமுங்' கூறும் உரைகளையும் நாயகரவர்கள் எடுத்துக் காட்டினர். இவ்வாற்றாற், சிவபிரானுக்குப் படைத்தெடுத்த ‘நின்மாலியம்’ தூயர்க்கு ஆகா தென்றுந், தூயரல்லாதார்க்கே ஆவதென்றுங் கூறிய வைணவருரை புரைபட்டுப் பொய்யா யொழிதல் காண்க. சைவசமயத்தைப் புறம்பழித்தற் பொருட்டு மாயாவாதிகளும் வைணவர்களும் பிற்காலத்தே புனைந் தெழுதிய பொய்நூற் பொருள்கொண்டு, பழைய வேதாந்த நூலாகிய ஜாபால உபநிடதம் உயர்த்துப் பேசிய சிவநின்மா லியத்தை இழித்துப் பேசுவார் தீவினையாளராவரேயன்றி, நல்வினையாளர் ஆவரல்லரென்பது கடைப்பிடிக்க. இன்னும் இதுபற்றி நாயகரவர்கள் விரித்தெழுதியிருக்கும் பகுதிகளை ஈண்டெடுத்துக் காட்டின் இது மிக விரியுமாதலின் தனை இவ்வளவில் நிறுத்துகின்றாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/222&oldid=1587329" இலிருந்து மீள்விக்கப்பட்டது