உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

15. கண்ணன் பிறவி

இனித், திருமாலே கண்ணனாகப் பிறவியெடுத்தார் என வைணவர் சிலர் விடாப்பிடியாய்க் கூறிக், கண்ணனை வழிபட்டவர் வீடுபேற்றை எய்தினரென்றும், பித்தனான சிவனை வழிபட்டவர் வீடுபேற்றை எய்தாமல் உருத்திர பதத்தையே பெற்றனரென்றுங் கரைந்ததனை நாயகரவர்கள் மறுத்திருக்கும் பகுதியும் நினைவிற் பதிக்கற்பால தொன்றா யிருக்கின்றது.

திருமாலே கண்ணனாகப் பிறந்தாரென்று பழைய நூலாகிய மாபாரதம் உரைப்பக் காணேம். மற்று, அந்நூலின் ‘ஆதீபர்வத்’ தின்கண்ணே (7306) தேவர்கள் தமக்கு அசுரர் களால் நேரும் இடுக்கண் தீர்ப்பான்வேண்டி விஷ்ணுவைக் குறையிரப்ப, அவர் தமதுடம்பின்கண் உள்ள கறுப்புமயிர் ஒன்றையும் வெள்ளைமயிரொன்றையும் பிடுங்கிப் போக்க, அவை யதுகுலத்தவராகிய தேவகி, உரோகிணி என்னும் மாதர் இருவர் கருப்பையினுள்ளும் நுழைந்து வெள்ளைமயிர் பலதேவனாகவுங், கறுப்புமயிர் கிருஷ்ணனாகவும் பிறந்தன வென்னும் வரலாறு நுவலப்பட்டிருக்கின்றது. இவ்வாறு கண்ணன் பலராமன் பிறப்புக்களைக் கூறும் மாபாரத க்கிணங்கவே 'விஷ்ணுபுராணமும்' (5, 1, 12) அவர்தம் அவ்வரலாற்றினைக் கூறாநிற்கின்றது. இதனால், விஷ்ணுவே கண்ணனும் பலராமனுமாகப் பிறந்திலர்; அவர்தம் மயிர்கள் இரண்டே அவ்விருவருமாகப் பிறந்தனவென்பது நன்கு விளங்கி நிற்கின்றது. ஆகவே, விஷ்ணுவே கண்ணனாகப் பிறந்தன னென்னும் வைணவரின் கூற்று, பழைய நூல் வரலாற்றுக்கு முற்றும் முரணாய்ப் பொய்பட் ாழிதல் காண்க. மேலும், இந்நூல் வரலாற்றினால் விஷ்ணு வினுடம்பில் நரைமயிரும் உளதென்பது பெறப்படுதலால், அவர் நரை திரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/223&oldid=1587330" இலிருந்து மீள்விக்கப்பட்டது