உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

214

மறைமலையம் – 21

அங்ஙனமாயினும், முன்னே யூதர்களும் மகமதியர் களுங்கூடக் கடவுளுக்குப் பிறப்பிறப்புச் சொல்லவில்லை யென்றமையாற் சைவ நன்மக்களே அக் கடவுளிலக்கணத்தை அறிந்தார்களென்பது யாங்ஙனமெனின், அவர்கள்

கடவுளுக்குப் பிறப்பிறப்புச் சொல்லாவிட்டாலுங் கடவுள் பிறந்திறவாதவன் என்பதனையும் உயிர்களே பிறந்திறப்பன என்பதனையுஞ் சைவசமய ஆசிரியர்களைப் போலப் பிரித்துக் காட்டி அவர்கள் ஆசிரியன்மார் எவருந் தமது விவிலிய வேதத்திலாதல் குரானி லாதல் வலியுறுத்திச் சொல்லி விளக்கினாரில்லை. மற்றுத் தமிழாசிரியர்கள் நூல்களிலோ மிகப் பழையகாலந் தொட்டே கடவுள் வினையின் நீங்கிய னென்றும், அவன் பிறவா யாக்கைய னென்றுந், தந்தை தாய் இல்லாதவனென்றும், எல்லா உயிர்களும் இறந்த சுடுகாட்டில் தான் என்றும் இறவாது நின்றே ஆடுவானென்றும் பலகாலும் வ வற்புறுத்திச் சொல்லும் மெய்யு ரைகள் அடுத்தடுத்து காணப்படுகின்றன. ஏனைச் சமயத்தவர் நூல்களிலோ இங்ஙனம் வரையறுத்துரைக்கும் மெய்யுரை காண்ட லியலாது. இறைவனிலக்கணத்தைத்

யினைக்

தளிய

உணர்தலும் இயலாது. ஆகவே, பிறப்பு வளர்ப்புகள் ஒருவாற்றா னுங் கேட்டறியப்படாத முதல்வனுக்கு எவ்வகை யான கேடும் எக்காலத்தும் எவ்விடத்தும் நிகழாதென்பது தெரித்தற் பொருட் டாகவே ‘கேடொன்றில்லான்' என்னுஞ் சொற்றொடரைக் 'கேட்டாரு மறியாதான்' என்னுஞ் சொற் றொடர்க்குப் பின்னே பெரிதும் இயைபுபடவைத்து மாணிக்க வாசகப் பெருமான் அருளிச் செய்வாராயினர்.

இனிக், 'கிளையிலான்' என்பது ‘சுற்றத்தாரை இல்லாத வன்' என்று பொருள்படும். உறவினரைக் குறிக்குஞ் சுற்றம் கேள் உறவு முதலான பல தமிழ்ச் சொற்களிருக்கவும் அவற்றை யெல்லாம் விட்டுக் கிளையென்னுந் தமிழ்ச் சொல்லால்

அடிகள் அதனை அருளிச் செய்திருக்கும் நுட்பம்

ஆராயற்பாலது. கிளை யென்னுஞ்சொல் ஒருவர்க்கும் அவரோடு உடம்பின் தொடர்பு உடையார்க்கும் உள்ள நருங்கிய இசைவினைத் தெரிவிக்கு மாறுபோல் மற்றச் சொற்கள் தெரிவிக்கவில்லை. கிளை யென்பது முதன் முதல் மரத்தின் கோடுகளுக்கே பெயராக வழங்கப்பட்டதாகும். ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/247&oldid=1587354" இலிருந்து மீள்விக்கப்பட்டது