உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

❖ - 21❖ மறைமலையம் – 21

அ ங்ஙனமாயின், எண்ணிறந்த உயிர்கள் இறைவன் என்றுள்ளானோ அன்றுதொட்டே அவனிடத்தில் தாமும் தம்மிடத்தில் அவனுமாக நெருங்கிய தொடர்புடையராய் ருத்தலால் உயிர்களை அவனுக்குக் கிளைஞராகக் கூறுதல் பாருத்தமன்றோ எனிற், கிளைஞரென்பார் ஒருவருக் கொருவர் உதவியுந் துணையுமாய் இருக்குந் தன்மையராவர். து கிளையென்னுஞ் சொல்லின் முதற்பொருளினாலேயே இனிது விளங்கா நிற்கும். எங்ஙனமெனின், மரத்தாற் கிளையுங் கிளையால் மரமும் உயிர்வாழ்கின்றன. அடிமரத்தை வெட்டி னாற் கிளைகள் பட்டுப்போம். கிளைகளையெல்லாம் வெட்டி னால் மரமும் பட்டுப்போம். இது பெரும்பாலும் எல்லா மரங் களிடத்துங் காணப்படும் உண்மை நிகழ்ச்சியாம். இதுபோலவே தாய்தந்தையர் தம் மக்கள் இளைஞராயிருக்கும் பொ பாழுது அவர்க்கு உதவியுந் துணையுமாய் நின்று அவரைப் பாதுகாத்து உயிர்வாழச் செய்கின்றனர். மக்கள் வளர்ந்து பெரியராம் பொழுது தம் தாய்தந்தையர் ஆண்டின் முதிர்ந்து வலிவுகுன்றப் பெறுதலால் மக்கள் அவர்க்கு உதவியுந் துணையுமாய் நின்று அவரை உயிர்வாழச் செய்கின்றனர். இங்ஙனமே உடன் பிறந்தாரும் ஒருவருக்கொருவர் உதவியுந் துணையுமாய் நின்று உயிர்வாழ்தலை நேரே காண்கின்றோம். ஆக கிளைஞராவா ரெல்லாரும் ஒருவருக்கொருவர் உதவியுந் துணையுமாய் நின்று ஒழுகினால் மட்டும்

வ,

அவர்

கிளைஞரென்று பெயர் பெறுதற் குரியாரென்பது பெறப்படும். இந்த முறையில் வைத்துக் கடவுளுங் கடவுளொடு தொன்று தொட்டு இருக்கும் உயிர் களும் ஒருவருக்கொருவர் உதவியுங் துணையுமாயிருந்து உயிர் வாழுந் தன்மையராயின், அவர் தம்மையுங் கிளைஞரென்று மொழிதல் பொருந்தும். கடவுள் உயிர்களுக்கு உற்ற துணையும் உதவியுமாய் நிற்றல் போல உயிர்களுங் கடவுளுக்கு உற்ற துணையும் உதவியுமாய் நின்று அவரை உயிர் வாழச் செய்கு வராயின், அவரை அவர்க்குக் கிளைஞரென்று கூறுதல் பொருத்தமாம். மற்று உயிர்களோ பண்டு தொட்டே அறியாமை யென்னும் பேரிருளால் விழுங்கப் பட்டுத் தம்மையும் உணராமல் தம் உயிர்க்குயிராய் நின்று தமக்குப் பேருதவி செய்துவரும் முதல்வனையும் உணராமல் வலியற்ற நிலையினராய் இருத்த லாலும், இறை வனுடைய உதவியைப் பெற்று அறிவு விளங்கித் தம்மையுந் தலைவனையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/249&oldid=1587356" இலிருந்து மீள்விக்கப்பட்டது