உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

217

உணரும்நிலை வந்த ஞான்றுந் தம்முடைய அறிவுஞ் செயலும் இறைவன்றன் பேரறிவு பேராற்றல்களின் முன் வலிவிழந்தன வாயே இருப்பதல்லது அவ் விறைவற்குத் தம் அறிவாலுந் தம் செயலாலுஞ் செய்யத்தக்க உதவி சிறிது மில்லாமையாலும், எல்லாச் செல்வமுஞ் செயலும் உடைய இறைவனுக்குமுன் அவ் உயிர்கள், செயலிழந்த வறிய இரவலரே யாவரல்லது அவனுக்குக் கிளைஞராதல் ஒருவாற்றா னுஞ் செல்லாது. ங்ஙனம் எண்ணிறந்த அவ் உயிர்த் தொகை களை யெல்லாம் எல்லாம்வல்ல இறைவனுக்குக் கிளைஞராகச் சொல்லுதல் ருவாற்றானும் சையாமையால், இவ் உண்மையை நன்குணர்ந்த மாணிக்கவாசகப் பெருமான் கிளையிலான்’ என்று அருளிச்செய்தாரென்பது.

இனிக், 'கேளாதே எல்லாங் கேட்டான்' என்னுஞ் சொற்றொடர் பிறர் சொல்வனவற்றைச் செவியென்னுங் கருவியாற் கேட்டு அறியும் நம்மனோர் போலாது, அக் கருவியில்லாமலே உலகின் கண்ணுள்ள எல்லா மக்களுஞ் சொல்லுஞ் சொற்களையும் நினைக்கும் நினைவுகளையும் அறிய வல்லான் எனவும், வாயென்னுங் கருவி கொண்டு பிறர்பால் அறிய வேண்டுவனவற்றைக் கேட்டறியும் நம்மனோர் போலாது அக் கருவியின் உதவியில்லாமலே பிறர் உள்ளத்து நிகழும் நிகழ்ச்சிகளையெல்லாந் தன் நினைவினாலேயே உணர வல்லான் எனவும் இருபொருள் தருவதாம். மக்கட்பிறவி யினராகிய நாம் செவியினுதவியின்றிப் பிறர் சொல்வனவற்றைக் கேட்டுணரும் ஆற்றலில்லாதவர்களாயிருக்கின்றோம். வாயினு தவியின்றிப் பிறரை வினாவித் தெரிய வேண்டுவனவற்றைத் தெரிந்து கொள்ள இயலாதவர்களாயிருக்கின்றோம். செவியும்

வாயு மில்லாத செவிடரும் ஊமரும் அக் கருவிகள்

இல்லாமையாற் படுந் துன்பத்தைக் கண்டு எவ்வளவு இரக்கமுறு கின்றோம். தம்மினும் அறிவிற் சிறந்தவர்களில்லையெனவுந், தம்மினும் வலிமையிற் சிறந்தவர்களில்லையெனவும் இறுமாந்து நின்றோர் குருடர் ஊமர் முதலான உறுப்பறைகளைக் கண்டு தாமும் அவர்களைப் போற் பழுதுபட்டிருந்தால் தம்முடைய நிலையும் எவ்வளவு துன்புறத் தக்கதா யிருக்குமென்று நினைந்து அதனால் தமது சிறுமையும் எல்லாம்வல்ல இறைவன்றன் பெருமையும் உணர்ந்து நெஞ்சம் நெக்குருகுதலைக் காண்கின்றோமல்லமோ? இங்ஙனமே இவ்வரிய உடம்பில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/250&oldid=1587357" இலிருந்து மீள்விக்கப்பட்டது