உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

❖ 21❖ மறைமலையம் – 21

அமைந்த மற்றைப் பொறிகளும் மற்றை உறுப்புக்களும் பழுதுபட்டுப் போகுமானால், அவ்வுடம் பின்கண் நிற்கு முயிர் அதனால் அறிவு விளங்கப் பெறாது ஏதொரு செயலுமின்றி வறுங்கல்லைப் போற் கிடக்குமன்றோ? இறைவன் அருள்கனிந்து அளித்தருளிய இவ்வுறுப்புகளின் உதவியை முழுதும் பெற்று உயிர் வாழுஞ் சிலர் அவ்வுதவியைத் தினைத்துணையும் நினைந்துபாராமல் யாமே கடவுளென்று செருக்கிப் பேசா நிற்பர். அவருடைய செருக்கெல்லாம் அவர்தம் உறுப்புகள் சீர்குலைந்து போனால் நிலைக்குமோ சொன் மின்கள் அன்பர்களே!

99

இவ்வாறாக உடம்பினுதவியும் உடம்பிலமைந்த உறுப்பு களினுதவியும் இன்றி அறிவுஞ் செயலுங் கைகூடப் பெறாத நம்மனோர் நிலைமைக்கும், இவ்வுறுப்புகளின் உதவி சிறிதும் வேண்டாமலே எண்ணிறந்த உலகங்களையும் அவ்வுலகங்களி லுள்ள எண்ணிறந்த கோடி உயிர்களையுங் “காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி வரும் எல்லாம் வல்ல ஐயனுடைய நிலை மைக்கும் ஒப்புமை எங்கே! தொன்று தொட்டே பேரிருளாகிய அறியாமையிற் கிடந்து அறிவொளி மழுங்கிப் பின்னர் இறைவன் தந்த உடம்பாலும் அவ்வுடம்பின் உறுப்புகளாலுஞ் சிறிதுசிறிதாக அறிவு விளங்கப் பெற்று வரும் நம்மனோர்க்கே ஊனுடம்பின் கருவிகள் வேண்டப்படுவதன்றி, இக் கருவிகளைப் படைத்துக் கொடுக்கும் எல்லாம்வல்ல இறைவனுக்கு இக் கருவிகளும் இவற்றினுதவிகளுஞ் சிறிதும் வேண்டப்படா; இது பற்றியே,

“செவியினாற்

கேளாததாய்ச்

சவியினைக் கேட்பிப்பதாய் உள்ளதெதுவோ அதுவே பிரமம் என்றும், வாயினாற் பேசாததாய் வாயினைப் பேசுவிப்பதாய் உள்ள

தெதுவோ அதுவே பிரமம் என்றும் அறி; அதன் பக்கத்தேயிருந்து அதனால் இயக்கப்படுகின்ற நீ பிரமமாகாய்.

எனக் கேநோபநிடதம் வற்புறுத்துக் கூறுவதாயிற்று.. இவ்வுண்மையினையே மாணிக்கவாசகப் பெருமான், 'கேளாதே எல்லாங் கேட்டான்' என்னுஞ் சொற்றொடரால் தெளியக் கூறினார்.

என்று இதுகாறுங் கேட்டாரு மறியாதான், கேடொன்றில் லான், கிளையிலான், கேளாதே யெல்லாங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/251&oldid=1587358" இலிருந்து மீள்விக்கப்பட்டது