உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா கேட்டான் என்பனவற்றாற் பெறப்பட்ட கடவுள் இலக்கணங்கள் அவ்வள வும் இந் நிலவுலகத்துள்ள எல்லா மக்களாலும் எல்லாச் சமயத்தாராலும் ஏற்றுக் எல்லார்க்கும்

ஆகவே

கொள்ளப்படுவனவேயாகும். உடன்பாட ான வை கடவுளுக்குரிய பொது இலக்கணங்க ளெனப்படும். இப்பொது இலக்கணங்களால், இப் பொது விலக்கணங்களை உடையவராக நம்மால் ஆராய்ந்தறியப் பட்ட கடவுள்நிலை, சிற்றறிவினராகிய நமது சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாததாயிருக்கின்றது. எப்பொருளுங் கடந்த முதல்வனை, எவராலுங் கேட்டறியப்படாத தலைவனை, எவ்வகை அழிவுக்கும் அகப்படாத ஆண்டவனை, எவ்வகைப் பட்ட கிளைஞருமில்லாத தன்னந் தனியனை, யாமறியாதே யாம் கேளாதே இருக்கவும் எமக்கு வேண்டுவனவெல்லாந் தந்து தலையளித்துவருந் தோன்றாத் துணையை ஏழையேம் எங்ஙனங் காண்பேம்? அவனது அருட்பேரமிழ்தத்தை

எங்ஙனம் பருகுவேம்?எம்மை இடையறாது பற்றித் தொடர்ந்துவரும் பிறவித் துன்பத்தை எங்ஙனம் நீக்குவேம்? என்று எண்ணி எண்ணி நெஞ்சங் குழையாநின்ற நேரங்களில் அவனது எட்டா நிலைமை யில் எம் மனம் பற்றுவதின்றாய் அவன் திருவுருவினைக் காண வும் அவன் திருவடிகளைப் பற்றிக் கொண்டு தேம்பவும் விழைந்து என்பில்லாப் புழுவினுங் கடைப்பட் எம்மையும் கடைக்கணிப்பனோ என்று எமதுள்ளம் ஏங்குகின்றதன்றோ? அத்தகைய அடங்கா ஏக்கத்தின்பாற்பட்ட எம் சிற்றுயிர்க்குக் கடவுளின் எட்டா நிலைமையைச் சொல்லிச் சொல்லிக் காட்டுவதால் எம் ஏக்கங் தீருமோ? தீராதன்றே! அவன், தன்னில் எவ்வளவு பெரிய னாயினும் எவ்வளவு எட்டா நிலைமை யனாயினும் எம் போன்ற சிற்றுயிர்களுக்கு இரங்கி எளிவந்து தோன்றி அருள் செய்யினன்றோ எமது ஏக்கந் தீரும், அப்போதன்றோ எம துள்ளம் இவ்வுலகத்தை மறந்து, இங்குள்ள தொடர்புகளை மறந்து மேலெழும்பி அவன் திருவடிகளிற் படியும்; அப்போதன் றோ கடவுளின் உண்மை நிலை எமக்கு விளங்கும். அதுகாறுஞ் சருக்கரையைக் கண்டறியாதவன், அதன் சுவையைச் சுவைத்தறியாதவன் அதன் இனிமையினை வியந்து வியந்து பேசிச் சலிப்படைவதல்லது அதனைப் பெற்றுச் சுவைத்து L மகிழும்வகை அவற்குக் கைகூடாதவாறு போல், யாமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/252&oldid=1587359" இலிருந்து மீள்விக்கப்பட்டது