உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

மறைமலையம் – 21

கடவுளின் எட்டாத நிலைகளை, அவன்றன் பேரின்பப் பெருஞ்சுவையைப் பேசிப்பேசி எண்ணி எண்ணி வாடுவதல்லது அவனைப் பெற்று அவனது பேரின்பவயமாய் நிற்கும் பெரும்பேறு எமக்குக் கைகூடுமோ?

66

கடவுள் தாமே தோன்றியவ ரென்பதும், அவரது இருப்பு இன்றியமையாத தென்பதும், மாயையைக் கடந்தவரென்பதும், அவர் எளியர் என்பதும், சிற்றுயிர்களிற் காணப்படும் வரிசைக்கும் உள்வேற்றுமைக்கும் அவர் மேம்பட்டவ ரென்பதும், பகுக்கப்படாதவ ரென்பதும், உயிருள் பொருள் களிலும் இயக்கங்களிலும் இன்றியமையாத் தன்மைகளிலும் அவையல்லாத தன்மைகளிலும் மறைந்துள்ள செயல்களிலும் வெளிப்பட்ட செயல்களிலும் உள்ள வேற்றுமைகள் அவர் உடையரல்லர் என்பதும், அவர் ஓரினத்திற் சேர்க்கப்படுதலில் லாதவ ரென்பதும், மெய்ம்மை வாய்ந்த அளவிலாத் தன்மைய ரென்பதுந், தாம் காட்டும் நல்லியல்புகளுக்கு வேறான திருவுருவம் வாய்ந்தவரென்பதுந், தீமையின் இருப்புக்கு இடந்தருவரே யன்றி அத் தீமையினை உண்டு பண்ணுபவர் அல்லரென்பதுந், தாமே எல்லா முடையரென்பதுந், தம்பா லன்பினர் என்பதுந், தம்பால் தனித்த பேரின்பத்தை உடைய ரென்பதும் ஆகிய அவருடைய இயல்புகள் எமது வாழ்க்கை யோடு எவ் வகையான தொடர்பு கொண்டு நிற்கின்றன? அவருடைய இவ்வியல்புகள் தனித்தனியே தமக்கு ஒத்த வகையாக எமது ஒழுகலாற்றினைத் திருத்திக் கொள்வதற்கு இடஞ் செய்யாவாயின், அவை உண்மையே யாயினும் அல்ல தவை பொய்யேயாயினும் அவை ஒருவனுடைய சமய வாழ்க் கைக்கு எந்தவகையில் வேறுபட்ட பயனைத் தரக்கூடும்?

“என்னளவில் மேற்குறிக்கப்பட்ட கடவுள் இயல்புகளைப் பற்றிய நினைவுகளுக்கு மாறானவைகளைச் சொல்வதில் யான் வெறுப்புடையேனாயினும், இவைகள் குற்றமில்லாதனவாகவே எடுக்கப்படுமாயினும் நமது சமய வாழ்க்கைக்கு இவை தினைத் துணையாவது பயன்படுமென்று கருதக்கூடவில்லை என்பதைத் திறந்து சொல்கின்றேன். ஆகவே, இவை ஒன்றும் உண்மை யாவன அல்ல. கடவுள் எளிமையுடையராயிருந்தால் அந்த இயல்புக்குப் பொருத்த மாம்படி யான் எவ்வகையான ஒழுக லாற்றில் ஒழுகக்கூடும், அதனை சொன்மின்கள்! அவர் தனிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/253&oldid=1587360" இலிருந்து மீள்விக்கப்பட்டது