உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

221

பட்ட நிறைவான இன்பமுடையரானால், அதனை உணர்வத னால் யான் எனது நடக்கையை எவ்வாறு வகுத்துக் கொள்ளக் கூடுமோ அதனைச் சொன்மின்கள்! அத்தகைய இயல்புகளைப் பற்றிய சொற்றொகுதிகள் கடவுளைப் பற்றிய உண்மையான உணர்ச்சியை எமக்குத் தருகின்றனவா? கடவுளிருப்பினை நம்பிய கோட்பாடுகள் தொடர்பாக நிலவு மாயினும், உண்மைச் சமயமானது இந் நிலவுலகத்தில் இல்லாமற் பறந்தோடி விடும். ஆனாற், பயன்படத்தக்க சமய வாழ்க்கை யிலிருந்து நோக்கு வேனானால், மேற்குறித்த வெற்றியல்புகள் கல்விப் புலமை மிக்கோர் கட்டிவிட்ட சிறிதும் பயன்படாத கட்டுப்பாடுகளே யல்லாமல் அவற்றை வேறென் னென்று விளம்புவேன்!

"இனி, அவை அங்ஙனமிருக்க நமது ஒழுக்கமுறைக்கு ஒத்த கடவுளின் இயல்புகளைச் சிறிது ஆராய்வாம். இவ்வியல்பு களோ அச்சத்தையும் நம்பிக்கையினையும் நிலைபெறச் செய்து தூய துறவு வாழ்க்கைக்கு அடிப்படை கோலுகின்றன. யாங்ஙன மெனிற், கடவுள் தூயதன்மை யுடையரென்று கொண்டால், அவர் உயிர்களின் நன்மையினையன்றி வேறொன்றனையுங் கருதார். அவர் எல்லாம் வல்லரென்று கொண்டால் அவர் அந் நன்மையினை உயிர்களுக்கு முடித்துத்தர வல்லுநராவர். அவர் எல்லாம் உணர்பவர் என்று கொண்டால் அவர் இருளிலும் நம்மைக் காண வல்லுநராவர். அவர் நடுநிலையாளரென்று கொண்டால் நம்முடைய தவறுகளைக் கண்டு அவர் ஒறுக்க வல்லுநராவர். அவர் அன்புடையரெனக் கொண்டால் நம் இழுக்கங்களை அவர் மன்னிக்கவும் வல்லுநராவர். அவர் மாறாத இயற்கையரென்று கொண்டால் அவரது உதவியில் நாம் நம்பியிருக்கக் கூடும். இத்தகைய இயல்புகளே நமது வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையனவாக இருத்த லால், இவைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாததாகும். கடவுள் உலகத்தைப் படைத்ததன் நோக்கம் அவர் தமது பேரருட் சிறப்பினை உயிர்களுக்கு வழங்க வேண்டு மென்பதே யாகையால் இவ்வியல்பும் நமது வாழ்க்கை யோடு திட்டமான தொடர்புடையதாக விளங்காநிற்கின்றது”” எனவும், “கடந்த நிலையினைக் கூறும் மாயாவாத ஆராய்ச்சி யுரைகள் சமய உண்மையினை உலகமெல்லாந் தழுவும்படி செய்ய மாட்டாதவனவாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/254&oldid=1587361" இலிருந்து மீள்விக்கப்பட்டது