உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

❖ 21❖ மறைமலையம் – 21

”2

வழுவுகின்றன” எனவும் அமெரிக் காவில் மெய்யுணர்வி னராய் விளங்கிய உ.வில்லியம் ஜேம்ஸ் என்னுஞ் சான்றோர் ஆழ்ந்து ஆராய்ந்து உரைத்த அறிவுரைகள், கடவுளின் பொதுவியல் பாகிய கடந்த நிலைமையினை வற்புறுத்து உரைக்குங் கோட்பாடுகள் சிற்றுயிர்களாகிய நமக்கு எவ்வாற்றானும் பயன்படா என்பதையும், அவர் சிற்றுயிர்க ளெல்லாவற்றிற்கும் வேண்டுவதாகிய அழியாப் பெரும் பேற்றை நல்குதற்கும் அதனை நல்குதற்பொருட்டு எளியராய் வந்து அவை தம்மை ஆட் கொள்ளுதற்கும் அவர்க்கு இயற்கையாயுள்ள அன்பும் அருளும் இரக்கமுமாகிய அரும் பேரியல்புகளே எமக்கு எவ்வாற்றானும் பயன்படுமென்ப தையும் இனிது விளக்குகின்றன.

கடந்த நிலைமையனாய் நிற்கும் இறைவனைச் சிற்றுயிர் களாகிய எம்முடன் நெருங்கத் தொடர்பு படுத்துவன, அன்பும் அருளும் இரக்கமுமாகிய இவ்வியல்புகளேயாம். சிற்றுயிர் களாகிய எமது இவ் வுலக வாழ்க்கையி னுள்ளும் ஒருவரோடு ஒருவரை மனமகிழ இசைவித்து உயிர்வாழச் செய்வதும் அன்பும் அருளும் இரக்கமும் அல்லவோ? அன்பில்லாதவர்கள், பிற உயிர்களின் துன்பத்தைக் கண்டு இரங்காதவர்கள் ஒருவரோ டொருவர் கூடி உயிர்வாழ்தலும் உதவி வேண்டும் உயிர்களுக்கு உதவிபுரிதலும் உலகத்தில் நிகழக் கண்டதுண்டோ சொன் மின்கள்! இது பற்றியன்றோ ஆசிரியர் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார்,

66

“அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார் என்பு முரியர் பிறர்க்கு.”

என்று அருளிச் செய்வா ராயினர். தானீன்ற குழந்தை நோய் வாய்ப்பட்டு வருந்துகையில் ஊணும் உறக்கமுமின்றி அதன் பக்கத்தே இருந்து தாயானவள் கவலை கொண்டு வருந்துமாறு செய்வது எது? போர்மேற் சென்ற தன் கணவன் இறந்தான் எனக் கேட்டு ஏங்கி உயிர்துறந்த காதலியை அங்ஙனம் உயிர் துறக்கு மாறு செய்தது எது? தான் வழிபடுகடவுளின் திருவுருவக் கண்ணினின்று செந்நீர் வடிய நோக்கிய ஆற்றாது தம் கண்ணை இடந்து அக் கடவுள் வடிவத்தின் கண்ணில் அப்பிய கண்ணப் பரை அங்ஙனம் அப்புமாறு செய்தது எது? ஈன்று அணிய பன்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/255&oldid=1587362" இலிருந்து மீள்விக்கப்பட்டது