உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

223

குட்டிகள் தம் தாயினை இழந்து நிலைக்களன் காணாது தத்தளித்தலைக் கண்டு தாங்காமல் தாய்ப்பன்றி வடிவெடுத்து அவற்றின் துன்பத்தைப் போக்கிய இறைவனை அங்ஙனம் செய்யு மாறு ஏவியது ஏது? வேடனால் துரத்தப் பட்டுத் தன்னகம் புகுந்த புறாவின் அல்லல்கண்டு, அப்புறாவின் எடைக்கு ஈடாகத் தன்னு டம்பின் சதையினை அறுத்துக் கொடுத்த சோழ மன்னனை அங்ஙனஞ் செய்யுமாறு தூண்டியது எது? என்று நன்கு ஆராய்ந்து உணரின் அன்பும் அருளும் இரக்கமுமே அவ்வா றெல்லாம் செய்வவாயின என்பது புலப்படுகின்றதன்றோ?

ஆகவே சிற்றுயிர்களுக்குச், சிற்றுயிர்களின் அறிவுக்கு, நினைவுக்கு எட்டாத நிலையில் நிற்குங் கடவுளை அவ்வுயிர் களின் அறிவுக்கும் நினைவுக்குங் காட்சிக்குங்கூட எட்டிய நிலையிலே எளிதாகக் கொண்டு வந்து காட்டவல்லது கடவுளி டத்துள்ள அருட்டன்மையே என்பது நன்கு விளங்கற் பாலதாம். கடவுள் மற்றை எல்லா உயர்ந்த தன்மைகளும் உடையரா யிருப்பினும் அவ்வருட்டன்மை ஒன்று மட்டும் இலராயின் இவ்வுலகத்தையும் இவ்வுலகத்துற்ற உயிர்களையும் நாம் காண்டலியலாது. பிறர்படுந் துன்பத்தைக் கண்டு இரக்கப்படாத ஒருவர் அவர்கட்கு ஏதோர் உதவியுஞ் செய்யக் கண்டதுண் டோ? இரக்கமும் ஈர நெஞ்சமும் இல்லாதவர்கள் பிறரோடு அன்பாய்ப் பேசினும் எங்கே அவர்க்கு உதவி செய்ய நேர்ந்து விடுமோ என்று நெஞ்சம் நடுநடுங்கிப் பிறரொடு பேசாதும் அவரோடு அளவளாவாதுந் தனித்துறவு நிலையை அடை தலைக் கண்டாமன்றோ? இத்தகைய துறவிகளுள்ளே கடவுளும் ஒருவராய் விடுவராயின், எமது உயிர்வாழ்க்கை இ வுலகத்தில் நடைபெறுமென்று கனவிலும் நினைதல் கூடுமோ? ஆதலினா லன்றோ, நம் சைவசமயத் தெய்வமாகிய சிவபிரான் தன்னை இத்தகைய துறவுநிலையிற் சேர்த்துக் கொள்ளாது கங்கையும் உமையுமாகிய இருமனைவியரையும், பிள்ளையார் முருக னென்னும், இரண்டு மக்களையும் உடையனாய்த் தனக்கு அன்பே வடிவென்பதை உணர்த்தலா யினான். இவ்வரும் பேருண்மை மற்றோரிடத்தும் நம் மாணிக்க வாசகப் பெருமா னால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/256&oldid=1587363" இலிருந்து மீள்விக்கப்பட்டது