உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

மறைமலையம் – 21

"தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ பெண்பால் உகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர் விண்பாலி யோகெய்தி விடுவர்காண் சாழலோ.”

என்று அறிவுறுத்தப்பட்டது.

அன்பர்களே! இங்கே யாம் கூறியது கொண்டு எல்லாம் வல்ல முதல்வனுக்கு மனைவிமாரும் மக்களும் உளர்போலும் என நினைந்து நமது முழுமுதற் றெய்வத்தை இழிவாக நினைந்து விடேன்மின்! மனைவி மக்களென்ற தொடர்பெல்லாம் அன்பினைப் புலப்படுத்தும் அடையாளங்களேயாம். அன்பும் இன்பமுமாகிய தன்னியல்புகள் தன்னோடு தொடர்புடையாரி டத்துப் புலனாவனவன்றி வேறு தாமாகவே புலனாவனவல்ல. இறைவனுடைய அன்பையும் இன்பத்தையும் பெறுதற்கு உரிமை உடையராய் அவனை நெருங்கி நிற்கும் நாமெல்லாம் அவனுக்கு மனைவியரும் மக்களுமேயாவம். மனைவி மக்களென்ற தொடர் புகளின் உண்மையை ஆழ்ந்து ஆராயுமிடத்து அவை அன்பென் னும் விதையில் முளைத்தெழுந்து ஓங்கிப் படர்ந்த தேமாவின் தேனொழுகு கனிகளேயாம். இன்னும் இதனை நுணுகி நோக்கு மிடத்து உலகமெங்கணும் புலனாகாது மறைந்து நிற்கும் ஒளி யினையுங் கத கதப்பினையும் புலனாகக் காட்டுந் திங்களும் ஞாயிறுமே அத் தொடர்புகளாம் என்று கருதுதலும் இழுக் காது. இந்த முறையிலேதான் கடவுளுக்குஞ் சிற்றுயிர் களாகிய எமக்கும் உள்ள தொடர்பு கருதற்பாற் றென்பதற்கே, சிவ பெருமானுக்கு மனைவியரும் மக்களும் உளராக வைத்துப் புனைந்துரை வகையால் ஆன்றோர் கூறுவாராயினர். இது காண்டு கடவுள் தாம் எட்டா நிலையினராயினுந், தாம் அந் நிலையிலேயே இருக்கும் விருப்பு இலராய், எமக்குந் தமது பேரின்பத்தை வழங்குதற் பொருட்டு எழுந்த பேர் அருட்டன் மையால் எமக்கு எளியராய் எமக்கு அணுக்கராய் யாம் வேண்டியவாறெல்லாம் வந்து உதவி செய்யுஞ் சிறப்பியல்பு வாய்ந்தவரென்பதே அறிதல் வேண்டும். இது வெறுஞ் சொல்லளவில் நில்லாது உண்மையாக நிகழ்வதாதலை, மாணிக்கவாசகப் பெருமான் தமக்கு இறவன் கட்புலனாக எழுந்தருளி வந்து அருள் செய்த உண்மை அருள் நிகழ்ச்சியை ஓரெடுத்துக் காட்டாய்க் கூறுவான் புகுந்து,

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/257&oldid=1587364" இலிருந்து மீள்விக்கப்பட்டது