உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா “நாட்டார்கள் விழித்திருக்க ஞாலத் துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு நாயினேற்கே காட்டா தனவெல்லாங் காட்டி.

என்று அருளிச் செய்வாராயினார்.

225

என்றது

இதன்கண் நாட்டார்கள் விழித்திருக்க’ உலகத்திலுள்ள மக்களெல்லாரும் இறைவனைக் காண்டற்கும் அவன்றன் அருள் உதவியைப் பெறுதற்கும் றுதற்கும் வேட்கை பெரிதுடையராய் இறைவன் தமக்குமுற் புலப்படும் நேரத்தை எதிர்பார்த்து அதிலே கண்ணுங் கருத்துமுடையராய் முனைந்து நிற்றலை விளக்கா நிற்கும். மக்களுள் எத்துணை இழிந்தோருங் கடவுளென்னுஞ் சொல்லைக் கேட்ட அளவானே அவனைக் காண்டலில் வேட்யுைங் கருத்தும் உடையரா யிருக்கின்றனர். அவ்வாறவர் வேட் மிகுந்துள்ளாராயினும், அவ் வேட்கையின்படி கடவுளைக் காணும் முயற்சியிலேயே அழுந்தி நிற்கமாட்டாமல் உலக இன்பங்களில் இழுப்புண்டு போதலின், அவர் கொண்ட வேட்கை கைகூடாது ஒழிகின்றது. இவரங்ஙன மொழிய, இப் பொது மக்களின் வேறான சிலர் பெருவேட்கையும் பெருமுயற்சியும் உடை யராய்த் தவமுயற்சியிற் புகுந்து கடவுளைக் காண்டலிலேயே கருத்து ஒருங்கி நிற்பர். அங்ஙனம் நிற்பார்க்குங் கூட இறைவன் கட்புலனாய்த் தோன்றி அருள் செய்யாது, தமக்கு அவன் நேரே தோன்றி அருள் செய்த அருட்பெருந் திறத்தை மாணிக்கவாசகப் பெருமான் ஞாலத்துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு நாயினேற்கே, காட்டாதன வெல்லாங் காட்டி' என்று அருளிச் செய்வாராயினர். இங்ஙனமே பிறிதோரிடத்தும்,

“மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்

மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத் திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும் முறையுளி ஒற்றி முயன்றவர்க் கொளித்தும் ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து உற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும் மறைத்திற நோக்கி வருந்தினர்க் கொளித்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/258&oldid=1587365" இலிருந்து மீள்விக்கப்பட்டது