உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மறைமலையம் - 21

இத்தந் திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்கு

அத்தந் திரத்தின் அவ்வயின் ஒளித்தும் முனிவற நோக்கி நனிவரக் கௌவி

ஆணெனத் தேமான்றி அலியெனப் பெயர்ந்து

வாணுதற் பெண்ணென ஒளித்தும் சேண்வயின் ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும்போய்த் துற்றவை துறந்த வெற்றுயிராக்கை

அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும் ஒன்றுண் டில்லை யென்றறிவு ஒளித்தும் பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்,

ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலிற் றாடளை இடுமின்

சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின் பற்றுமின் என்றவர் பற்றுமுற் றொளித்தும் தன்னே ரில்லோன் தானேயான தன்மை என்னே ரனையோர் கேட்கவந் தியம்பி அறைகூவி யாட்கொண் டருளி

மறையோர் கோலங் காட்டி யருளலும்”

(திருவண்டப்பகுதி 124 – 149)

என்று அடிகள் திருவாய் மலர்ந்தமை காண்க.

அற்றேல், தவமுயற்சியிற் புகுந்த முனிவரராலும் அறியப்படாத முதல்வனை அத் தவமுயற்சியின்றி அரச வாழ்க்கையிலிருந்த மாணிக்கவாசகர் அவனது அருளை நேரே பெற்றனரென்றலும், தம்மை நோக்கித் தவம்புரிந்த முனிவரர்க்கும் அருள் வழங்காது அம் முயற்சிக்குப் புறம்பாய் நின்ற அடிகளுக்கு அவ்வருளை வழங்கினானென்றலும் இறைவனது அருட் டன்மைக்கு இழுக்காகாதோ எனின் கூறுதும்:

தவ முயற்சியைச் செய்வார்களெல்லாந் தாஞ் செய்யும் அம் முயற்சியினாலேயே தாங்கள் எண்ணியவைகளை

எண்ணியபடியே பெறுதல் கூடுமென்றும், பிறரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/259&oldid=1587366" இலிருந்து மீள்விக்கப்பட்டது