உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

227

வாழ்வித்தலுந், தாழ்வித்தலுந் தம் சொல்லளவினாலேயே நிகழுதல் கூடுமென்றும், வேறு எம் முயற்சிக்குங் கிட்டாத கடவுளைத் தமது தவமுயற்சியினாலேயே எளிதிற் கிட்டச் செய்தல் கூடுமென்றும் முனைப்புடன் நினைந்து செருக்குடை யராய் நிற்றலால், அவ் வருந்தவத்தோர் காட்சிக்குங் கடவுள் புலப்படாதவனாய்த் தன்னை ஒளிப்பன். தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனாரும் எனது என்னுஞ் செருக்குடையவர்கள் செய்யுந் தவமுயற்சி களெல்லாந் தேவர்களுறையுந் துறக்கவுலகங்களிற் செலுத்து மென்றும், அவ்விருவகைச் செருக்கும் அற்று முழுதும் அன்புருவாய் நின்றவர்களே வானோர்க்கும் மேலான இறைவன்றன் பேரின்ப வுலகப்பேற்றினை யெய்துவரென்றும் நன்கு வலியுறுத்தி

யான்

“யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்”

என்று அருளிச் செய்தனர். நமது உலகிய லொழுக்கத் திலுந் தம்மையுந் தமதறிவையுந் தமது முயற்சியையுமே பெரியனவாகக் கருதி இறுமாந்து நிற்பவர்கள் பிறர்பால் அன்புடையராய் ஒழுகுதலைக் காண்கிலமன்றோ? அன்பும் செருக்கும் ஒளியும் இருளும்போலத் தம்மில் மாறுபட்ட இயற்கையினவாகும். அன்பு நிகழுமுள்ளத்தில் இறுமாப்பு உண்டாகமாட்டாது; இறுமாப்பு மீதெழுந்து நிற்கு முள்ளத்தி லோ அன்பு ஓரெட்டுணையுந் தலைக்காட்ட மாட்டாது. ஆதலால் தவமுயற்சியானது மிகவும் பாராட்டற்பால தொன்றே யாயினும், அஃது ஏனை உலகியல் முயற்சிக ளெல்லாவற்றையும் விட மிகச் சிறந்ததே யாயினும் அது நிகழுங்கால் யான் எனதென் னுஞ் செருக்கும் அதனோடு உடன் நிகழுதலின் அம்முயற்சி யுடை ய முனிவர்க்கும் இறைவன் புலப்பட்டுத் தோன்றாது ஒளிப்ப னென்றார். வ்வுண்மை ஆசிரியர் திருமூல

நாயனாராலும்

“என்பே விறகா இறைச்சி யறுத்திட்டுப்

பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி என்பொன் மணியினை யெய்தவொண் ணாதே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/260&oldid=1587367" இலிருந்து மீள்விக்கப்பட்டது