உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

❖ 21❖ மறைமலையம் – 21

என்று நன்கெடுத்துக் காட்டப்பட்டது. பிற்காலத்திருந்த தாயுமானச் செல்வரும்,

66

அருளா லெவையும்பா ரென்றான்-அத்தை

அறியாதே சுட்டியென் னறிவாலே பார்த்தேன் இருளான பொருள்கண்ட தல்லாற்-கண்ட

என்னையுங் கண்டிலென் என்னேடி தோழி.”

என்றருளிச் செய்தார். யானென தென்னுந் தலையெடுப் புடையவர்களுக்கு உலகத்தவர் நேசத்தைப் பெறுதலும் இயலாதிருக்கையில், அதைச் சிறிதேனும் உடையவர்கள் அவ்விருளுக்குள் மறைந்த ஒளிபோற் புலப்படாது நிற்கும் இறைவனை யாங்ஙனம் காண்பர்? அன்பினால் அகங்கரை வாரிடத்து எத்தகைய இறுமாப்பும் இல்லாமையின், அவர்பால் எல்லாரும் அன்பு நிகழப் பெறுகின்றனர். இந்நிகழ்ச்சியோ டொப்பவே எல்லாம் வல்ல இறைவனும் அன்புடையார்க்கு மட்டுமே அணுக்கனாய் நின்று அருள் புரியும் நீர்மையனாவன். இவ்வாற்றால், அன்புநிலை யொன்றே தவநிலையினும் மேற் பட்டதாகும். அன்புநிலையொன்றே தவநிலைக்கு மெட் டாத முதல்வனைத் தன்னகப் படுத்து வதாகும். தவநிலையோ முயற்சி யுடையது. அன்புநிலையோ முயற்சியற்றது முயற்சி யுடையார் முயன்ற பொருளைப் பறுவது இயல்பாயிருக்கத் தவமுயற்சி யுடையார் கடவுளை யெய்தாமையும் அத்தகைய முயற்சி யில்லாத அன்பராயினார் ஆண்டவனைக் காண்டலும் வியக்கற் பாலனவா மல்லவோ? ஆயினும் முயற்சியாற் பெறப்படு வன வெல்லாம் காலத்தி னல்லையிலும் இடத்தினெல்லை யிலும் அகப்பட்ட வரம் புடைப் பொருள்களாய் அழியுந் தன்மைய வாய் இருத்தலால், காலத்தைக் கடந்தும் இடத்தைக் கடந்தும், அழிவின்றியும், மாறுதலின்றியும் வரம்பிலனாய் விளங்காநின்ற முதல்வனை அத்தகைய முயற்சிகள் எத்துணைச் சிறந்தனவா யிருப்பினும் அவை யாங்ஙனஞ் சென்று பற்றும்? மற்று, அன்போ அத்தகைய முயற்சியின் பாற் படிவதின்றிக் காலத் தானும் இடத்தானும் வரையறுக்கப் படாததாய் அழிவின்றி மாறின்றி என்றும் ஒருபடித்தாய் நிறைந்து நிற்கும்வழி, அந்நிலையில்

தன்னோடொத்த இறைவனை அது தான் பெற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/261&oldid=1587368" இலிருந்து மீள்விக்கப்பட்டது