உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

229

இன்புறுதலும் இயற்கை யாகும். இப் பெற்றித்தாகிய பேரன் பால் விழுங்கப் பெற்றவர் எவ்வகைச் செயலுமின்றி எவ்வகை முயற்சியுமின்றிப் பெருஞ் சோம்பராய்க் கிடப்பினும் அவரே இறைவன்றன் அருட்பெரு விளக்கங்களெல்லாம் எளிதிற் காண்பர் என்பது தெரிப்பார்,

"சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பது சுத்த வெளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம் சோம்பர் கண்டார்அச் சுருதிக்கட் டூக்கமே”

என்றும்,

“தூங்கிக் கண்டார்சிவ லோகமுந் தம்முள்ளே தூங்கிக் காண்டார் சிவ யோகமுந் தம்முள்ளே தூங்கிக் கண்டார்சிவ போகமுந் தம்முள்ளே

தூங்கிக் கண்டார்நிலை சொல்வ தெவ்வாறே.”

என்றுந் தெய்வத் திருமூலரும் அருளிச் செய்தார். ஆகவே, தவ முயற்சியில் நின்ற முனிவரர்க்கும் புலனாகாத முதல்வன் அத்தவ முயற்சிக்கும் மேம்பட்ட பேரன்பின் பெருக்கான மாணிக்க வாசகப் பெருமானாலி ழுக்கப்பட்டு அவர்க்கு எளி வந்து அருள்புரிந்தது பெரிதும் பொருத்தமே யாமன்றோ? எல்லாம் வல்ல இறைவன் இங்ஙனமாக நான்முகன் முதலான சிறந்த தேவர்களுக்குந் தவமுயற்சியிற் சிறந்த முனிவர்களுக்கும் எட்டாத அருவத் தன்மையனா யிருந்தும், தன்னை அன்பாற் குழைந்து குழைந்துருகும் மெய்யடியார்க்கு மிக எளியனாய் உருவு கொண்டு வந்து அருளும் இயல்பினன் என்பதை நம் சமயாசிரியர் மெய்வரலாறுகளில் மட்டுமே ஐயமின்றித் துணியப் பெறுகின்றோம்.நம் சமயாசிரியர்களுள்ளுந் திருஞான சம்பந்தப் பெருமானுக்கும் மாணிக்கவாசகப் பெருமானுக்கும் இறைவன் தன் உண்மையுருவில் வந்து அருள் செய்தமையே மிகவும் போற்றற்பாலதொன்றாயிருக்கின்றது. உலகியலறிவு நிரம்பப் பெறாத மூன்றாண்டுச் சிறு குழந்தையாயிருந்த போதே திருஞான சம்பந்தப் பெருமான் இறைவனையும் இறைவியையும் நேரேகண்டு அவர் தம்மால் அருட்பால் ஊட்டப் பெற்று எல்லாம் வல்ல ஞானாசிரியராய்த் திகழ்ந்து தாம் பெற்ற அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/262&oldid=1587369" இலிருந்து மீள்விக்கப்பட்டது