உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மறைமலையம் – 21

வருளமிழ்தத்தைச் செந்தமிழ்த் தெய்வப் பாக்களில் நிரப்பி அவை வாயிலாக நம்மனோரெல்லாம் அவ்வருளமிழ்தத்தைப் பருகி உய்யச் செய்தனரன்றோ? அங்ஙனமே மாணிக்கவாசகப் பெருமானுந் தாம் அமைச்சராயிருந்த காலத்தை இறைவனையும் இறைவியையும் நேரேகண்டு அவர் தம்மால் ஆட்கொள்ளப் பட்டனரென்பது,

“கருவாய் உலகினுக்கு அப்புறமாய் இப்புறத்தே மருவார் மலர்க்குழன் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைபயில் அந்தணனா யாண்டுகொண்ட திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பி.”

66

' நானும்என் சிந்தையு நாயகனுக் கெவ்விடத்தோம் தானுந்தன் தையலுந் தாழ்சடையோ னாண்டிலனேல் வானுந் திசைகளு மாகடலு மாயபிரான்

றேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.”

என்று அவர்தாமே அருளிச் செய்த அருமைத் திருப் பாட்டுக்களால் இனிது விளங்கா நிற்கின்றது.

இவ்வாறு கடவுளை நேரே கண்டதும், கண்ட அக்காட்சி யினைக் கண்டவர்தாமே தெளித்தெடுத்துச் சொல்லுதலும் நம் சிரியன் மாரிடத்தன்றி மற்றச் சமய குரவர்கள் பாற் சிறிதுங் காண்ட லியலாது. நம் ஆசிரியன்மார் கடவுளை நேரேகண்ட அருங்காட்சிகளே உண்மையானவை. இவ்வாறாகவும் ஆரியர் வழிப்பட்ட பார்ப்பனர்கள் கடவுள் அதோ அவருக்கு நேரே வந்து அருள் புரிந்தார். இதோ இவருக்கு நேரே வந்து அருள் புரிந்தார் என்னும் பொய்யான புராணக்கதைகள் பலவற்றைக் கட்டிவிட்டு அவைதம்மால் நம் சமயாசிரியர் கடவுளைக் கண்ட அருங்காட்சிகளையும் மிக எளியனவாகவுஞ் சிறப்பில்லாதன வாகவும் பலர் கருதும்படி செய்து விட்டனர்.

என்றாலும், நம்மாசிரியன்மார் கண்ட தெய்வக் காட்சிக்கு அவர்தம் அருட்செம் பாடல்களிலேயே மெய்ச்சான்றுகள் ருத்தல் போலப் புராணகதைகளிற் கடவுளைக் கண்டவராகச் சொல்லப்படுவோர் தங் காட்சிகளுக்கு மெய்ச்சான்றுகள் சிறிதுமில்லையென்பதை உண்மையாராய்ச்சி செய்பவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/263&oldid=1587370" இலிருந்து மீள்விக்கப்பட்டது