உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

231

தெளிந்து கொள்ளல் வேண்டும். மாணிக்கவாசகப் பெருமான் எவ்வளவு உறுதியாக எவ்வளவு உண்மையாக இறைவனும் இறைவியுந் தமக்குக் காட்சியளித்ததை மேலைச் செய்யுட்களில் எடுத்துக்காட்டி, எம்போல்வார்க்குங் கடவுளின் எளிவந்த அருட்டன்மையை விளக்கியிருக்கின்றார்!

இனி, மாணிக்கவாசகப் பெருமான் கண்ட இத்தெய்வக் காட்சியானது அதனைக் காண்டலில் வேட்கை மீதூர்ந்து விழிப்பாயிருந்த ஏனை எத்திறத்தார்க்கும் எட்டாதாயிற் றென்றும், அங்ஙனம் விழிப்பாயிருந்தார்க்கு உள்ள முயற்சியுந் தகுதிப் பாடுஞ் சிறிதுமில்லாத் தமக்கு அத் தெய்வக் காட்சி தோன்றுவதாயிற்றென்றும், அவ்வாறு தோன்றிய அத்தெய்வக் காட்சியாற் பிறரெவர்க்குங் காட்டப்படாத அருட்பெரும் புதுமைகளெல்லாம், பிறரெவருங் கேளாத அருமறைப் பொருள்களெல்லாந் தமக்குக் காட்டப்பட்டன, சொல்லப் பட்டன என்றும், ன

“நாட்டார்கள் விழித்திருக்க ஞாலத் துள்ளே

நாயினுக்குத் தவிசிட்டு நாயினேற்கே காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங் கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டா னெம்பெருமான் செய்திட்ட விச்சை தானே.”

என்னுஞ்

சொற்றொடர்களால்

செய்திருக்கின்றார்.

இன்னும்,

நன்கெடுத்து அருளிச்

இத்திருப்பாட்டின்கண்

66

நாயினுக்குத்

தவிசிட்டு நாயினேற்கே, காட்டாதனவெல்லாங் காட்டி” என்று அடிகள் தம்மை நாயினுக்கு ஒப்பிட்டுச் சொல்லி இருப்பதன் நுட்பமும் உற்று நோக்கற்பாலதாகும். எத்துணையும் பெரிய இறைவன் எத்துணையுஞ் சிறிய மக்கட்குத் தானே வலியவந்து தனது பேரருளை வழங்கும் பேரிரக்கத்தின் இயல்பையும் அப் பேரருளைப் பெறுவாரான மக்களின் பிறப்பிழிபையும் நன்கு விளங்க வைத்தற் பொருட்டு மக்களை நாய்ப்பிறவிக்கு ஒப்பிடு வாராயினார். நாய்ப்பிறவியினிடத்து நன்றியறித லாகிய சிறந்த இயல்பு இருப்பினும், அதனிடத்துக் காணப்படும்

ரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/264&oldid=1587371" இலிருந்து மீள்விக்கப்பட்டது