உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

மறைமலையம் – 21

வாய்ந்தனவாயிருக்கின்றன;

.

மற்றைப் பல இயல்புகள் மிக இழிந்தன வாயிருக்கின்றன. எல்லா உயிர்க்கும் பசியுங் காமமும் இயல்பாகவே அமைந்துள்ளன; என்றாலுஞ், சில சிற்றுயிர்கள் அப்பசியைத் தீர்த்துக் கொள்ளும் முறையிலுங் காமத்தைத் தீர்த்துக் கொள்ளும் முறையிலும் அன்பும் நாகரிக ஒழுக்கமும் மற்றைச்சில உயிர்களோ அத்தகைய அன்பும் நாகரிகமும் வாயாதன வாயிருக்கின்றன. இவ்வகையிற் காக்கையின் நடையானது மிகவும் பாராட்டற் பாலதாகும். யாங்ஙனமெனின், ஒரு காக்கையானது தனது காடும்பசியினைத் தீர்க்கும் இரையினைக் கண்டவிடத்தும், அஃது அதனைத் தானாகவே உண்ணாது! தன்னினமான மற்றைக் காக்கைகளையுங் கூவி யழைத்து அவற்றோடு ஒருங்கிருந்து அதனை உண்ணாநிற்கும். இவ்வாறு தன் இனத்தோடுண்ணும் இச்சிறந்த இயற்கையை ஏனைப் பல்லுயிர்களிடத்துக் காண்டல் அரிதினும் அரிது. இங்ஙனமே, தன் காமத்தைத் தீர்க்க அது தன் துணை துணை யோ யோடன்றிப் புணராதும், அங்ஙனம் புணருங்காலும் பிறவுயிர் களின் கண்ணிற் படாதும் ஒழுகும் இயற்கையையும் பிற சிற்றுயிர் களிடத்துக் காண்டல் அரிது. ஆனால் நாய்ப் பிறவியிலோ இத்தகைய அன்பும் இத்தகைய நாகரிகமுங் காணப்படுதல் சிறிதுமில்லை. ஒரு நாய் தனக்குக் கிடைத்த எச்சிற் சோற்றைத் தான் விரைந்து கௌவி உண்ணுங்காலையில், தன் மருங்கே பிறநாய்களைச் சிறிதும் அணுகவிடாமல் உறுமும்; அல்லது அவை அணுகுமாயின், அவற்றைச் சண்டையிட்டுத் துரத்தும். இவ்விழிந்த இயற்கையோடு, ஆணும் பெண்ணுமாய்ப் புணருங் காலத்தும், பலருங்காணப் புணர்ந்து துன்புற்று சிறுவர்களால லைக்கப்படுதலுங் காண்கின்றோம். மேலும், நாய்ப்பிறவி யானது எளிதிலே சொரியும் புண்ணுங்கொண்டு புழுத்து அழிவதாயும் உள்ளது. இங்ஙனமாக மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்ப் பிறவிகளுள் நாய்ப்பிறவியினும் இழிந்ததொன் றனைக் காண்டல் யாண்டும் இயலாது.

ஆனால் ஆறறிவு வாய்ந்த மக்கட்பிறவி எடுத்தாருட் பரும்பாலாரோ நாய்ப்பிறவியிற் காணப்படும் இழிந்த இயற்கை மூன்றும் உடையவராயிருக்கின்றனர். தமக்குக் டத்த உணவைத் தாம் உண்ண நேருங்காலத்திற் பசித்துவரும் ஏனையோரைத் தம்பால் அணுகவிடாமற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/265&oldid=1587372" இலிருந்து மீள்விக்கப்பட்டது