உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

235

இப்பெருந்தகையாரே தம்மோடொத்த மக்களுடம்பிலிருக்கும் உயிர்களை ஒருசிறிதும் இழித்துப் பேசுதற்கு மனம் ஒருப் படுதலில்லாராய் அவர்க்குள்ள குறைபாடுகளை யெல்லாந் தம்மேலேற்றிக் கொண்டு, இறைவனைக் குறையிரந்து அழுதழுது பாடாநிற்க, எல்லாக் குற்றங்களுமுடைய மக்களுட் சிலர் இப் பெருந்தகையாரையும் இவரை யொத்த மற்றைப் பெரியார்களையும், பொறுமையும் நுண்ணறிவுங் கொண்டு ஆராய்ந்து பார்க்கும் நல்வினையும் நல்லறிவுமிலராய்த் தமக்குத் தோன்றியவாறெல்லாம் இகழ்ந்து பேசிப் பழிபாவங்களுக்கு ஆளாய் ஒழிகின்றனர். அது கிடக்க.

பாது

னி, எல்லாவகையாலும் நாய்ப்பிறவியோடொத்த மக்கட் பிறவியினரையும் இறைவன் அருவருத்துத் தள்ளி விடாமல் அவரையும் பதப்படுத்தி அவர்க்குந் தனது அருட் பெருஞ் செல்வத்தை வழங்கும் அருள்வள்ளலாய்த் திகழும் பெற்றியினை மாணிக்கவாசகர் “நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே, காட்டாதனவெல்லாங் காட்டி” என்னும் முழுமணிச் சொற்றொடரால் நன்குதெருட்டி அருளினார். கடவுள் எல்லாப் பொருள்களையும் எல்லா உயிர்களையுங் கடந்து நிற்குந் தன்மையர் என்னும் இலக்கணத்தை உலகத்தின்கட் பரந்துபட்டுக் கிடக்கும் எல்லாச் சமயத்தவரும் உடன்பட்டுக் கூறுவாராயினும், அங்ஙனங் கடந்த நிலையினனாகிய இறைவன் மக்களாகிய நம்பொருட்டு நம்போல் வடிவு கொண்டு வந்து நம்மை ஆட்கொள்வன் என்னும் உண்மையினைக் கண்டறிந்தா ரல்லர். அவ் வரும் பேருண்மையானது மாணிக்க வாசகர் திருஞானசம்பந்தர் முதலான பெருந்தகையார் ஒருசிலர்க்குக் கட் புலனாய்த் தோன்றி அவரை ஆட்கொண்ட மெய் வரலாறுகளி னாலே தான் ஐயுறவுக்குச் சிறிதும் இடனின்றி நன்கு தெளியப் படுவதா கின்றது. இவரல்லாத எனையோர் கடவுளைக் கண்டார், கண்டு அவனருளை முற்றப்பெற்றார் என்பதற்குத் தக்க சான்று களில்லாமையால் ஏனைச் சமயத்தார் கூறுவன எல்லாம் வெறுங்கதைகளாகவே இருக்கின்றன.

மற்று, மாணிக்கவாசகர் தாங்கண்ட கடவுட் காட்சியி னையும் அக்காட்சியாற் பெற்ற அரும்பெரும் பேறுகளையுந் தமது திருப்பாட்டில் வலியுறுத்திக் கூறி எம்போல்வாரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/268&oldid=1587375" இலிருந்து மீள்விக்கப்பட்டது