உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

மறைமலையம் – 21

99

வாழ்வித்த அரும்பேருதவியினை எங்ஙனம் புகழ்வேன்! எவ்வாறு வாழ்த்துவேன்! எங்கும் எக்காலத்துங் காணலாகாத காட்சி யினைத் தாங் காணக் கிடைத்த அஞ்ஞான்றே, இதற்குமுன் தாங் கண்டிராத மேலுலகக் காட்சிகளையும், ஆங்காங்கு இறைவனருள் விளக்கந் திகழும் வகைகளையும், உயர்பதம் பெற்ற சான்றோர் அவ்வுயர்பதங்களில் இன்புற்று வைகும் வரலாறு களையுங், குழலொலி யாழொலியினும் இனிய தீங்குரலால் அச்சான்றோர் உரையாடும் மெய்ப் பொருள்களையுந் தாம் கண்டுகேட்ட புதுமைகளைக் குறிப்பாகக் "காட்டாதன வெல்லாங் காட்டி “கேளாதன வெல்லாங் கேட்பித்து" எனனுஞ் சொற்றொடர் களால் அடிகள் அறிவுறுத்தருளிய தனை அன்பர்களே உற்றுக் காண் மின்கள்! இவ்வளவு உறுதியோடு, இவ்வளவு உண்மை யோடு, இவ்வளவு மனவுருக்கத் தோடு, அருளிச்செய்த அடி களின் அருளுரைகளை நல்வினை வாய்ந்த எந்த அறிஞனேனும் எள்ளளவும் ஐயுறுதற்கு உடன் படுவனோ? கூறுமின்கள்! இத்துணை உறுதியான, இத்துணை மெய்யான தெய்வ மொழி களை வேறெங்கேனும், வேறெந்த மொழியிலேனும், வேறெந்தச் சமயத்திலேனுங் காணல்கூடுமோ ஆராய்ந்து பார்மின்கள்!

இனி, எல்லாப் பொருள்களையுங் கடந்து நிற்குங் கடவுளை, எத்தகையோர் நினைவுக்குஞ் சொல்லுக்கும் எட்டாத இறைவனைச் செயற்கருந் தவங்களைச் செய்த முனிவர்களின் முயற்சிக்கும் அகப்படாத முதல்வனைக் அ கட்புலனாற் காணவும் அவன் திருவாய்மலர்ந்த அருமறை மொழிகளைச் சவிப் புலனாற் கேட்கவும் பற்ற பெரும்பேறுடையார்க்கு வருவ தாகிய பெறலரும் பயன் ஈதென்பது உணர்த்துவார் “என்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட்கொண்டான்” என்னுஞ் சொற்றொடரை அருளிச் செய்தார். பிறவிவட்டத்திற் கிடந் துழலும் உயிர்களிற் பிறவித் துன்பத்தை உணர்தற்குரிய அறிவு வாய்ந்தோர் மக்கட் பிறவியினர் மட்டுமேயாவர். என்றாலும், அடுத்தடுத்து வரும் பிறவிகளாற் பிறந்தும் இறந்தும் நோய் கொண்டுங் கவலை கொண்டும் மூத்தும் படும் அளவிறந்த துன்பங்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நுகர்ந்து காண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/269&oldid=1587376" இலிருந்து மீள்விக்கப்பட்டது