உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

237

அத்துன்பங்களைத் துன்பங்களாகக் கருதாமல் இன்பங்களாக மயங்கி நினைந்து அவற்றிற் கிடந்துழலுதலையே மக்களெல் லாரும் மிக விழைந்து நிற்கின்றனர். இப்பிறவித் துன்பத்தை உள்ளத்தில் உறுத்த நினைந்து அதனினின்றும் விடு படுதலை வேண்டுவார் மிக அரியராய்க் காணப்படுகின்றனர். ஓரோ வாருகாற் பிறவியை அஞ்சி அதனை ஒழிக்க விரும்புவார் ஒருசிலர் இ இடையிடையே காணப்படினும், அவர்தாமும் அப்பிறவி நோய் தீர்த்தற்குரிய மெய்ம் மருந்தினை யறியாராய் மெய்யல்லாதவற்றைச் சொல்லித், தாமுந் தஞ்சொற் கேட்பாரும் அந்நோய் தீரப் பெறாது மீண்டும் மீண்டும் அப்பிறவி நோயி னாற் பற்றப்பட்டே துன்புறா நிற்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/270&oldid=1587377" இலிருந்து மீள்விக்கப்பட்டது