உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

4. பௌத்த சமண மதங்களின் ஒழுக்க முறைகள்

கு

பௌத்தசமயத்தைத் தோற்றுவித்த கௌதமசாக்கியருஞ் சமண் சமயத்தைத் தோற்றுவித்த மகாவீரரும் பிறவித் துன்பத்தை ஒழித்தல் வேண்டும், அதனை வேரறக்களைதல் வேண்டும் எனப் பலகாலும் வற்புறுத்திச் சொல்லி அதற்கு நல்லொழுக்க மொன்றே மருந்தாவதெனக் காட்டினராயினும், அவர் காட்டிய அம்மருந்து பிறவிநோய் தீர்க்கவல்லதன்று. யாங்ஙனமெனின், அவர் காட்டும் நல்லொழுக்கமாவன: மனத்தாற் பிறர்க்கு நல்லனவே நினைதலும் அவர்க்கு நலமாவனவே சொல்லுதலும் அவர்க்கு நன்மையாவனவே செய்தலும் என்னும் மூன்று வகையுள் அடங்கும். இவ்வாறு பிறர்நலம் பேணவே தாமுந் தூயராவர் என்பது அவர் கருத்து. இனிப், பிறர்க்கு நல்லவற்றை நினைவதென்பது என்னை யென்றாற் பிறர் படுந் துன்பங்களை நீக்குதற்குத் தக்கவழிகளை ஆராய்ந்து பார்த்தலேயாம். இனி அவ்வழிகள் தாம் யாவை யோவெனின், பிறர்துன்பங்களைக் களையுங் கொல்லாமை பொய்யாமை திருடாமை குடியாமை காமுறாமை முதலிய அறங்களேயாகும். இவ்வறங்களைச் சொல்லுதலே பிறர்க்கு நலங்கூறுவதாகும். இவ்வறங்களிற் பிறழாமல் அவர்களை அவற்றின்கண் நிலைபெறச் செய்தலே அவர்க்கு நலஞ் செய்வதாகும். இனி இவ்வாறன்றி வேறு ஏதும் நினையாதும் வேறுஏதுஞ் சொல்லாதும் வேறு ஏதுஞ் செய் யாதும் ஒழுகுவார்க்கு அவ்வொழுக்கமே தூய்மையைத் தரும்; இங்ஙனமன்றித் தம்மையும் பிறரையுந் தூய்மைசெய்தற்கு வேறு கடவுள்நினைவும் கடவுள் வணக்கமும் வேண்டா என்பதும், ஒழுக்கத்தால் தூயரானவர்க்குப் பிறவி தானே அற்றுப்போ மென் பதும் பௌத்த சமணசமயத்தார்க்கு ஒத்த கருத்தாகக் காணப் படுகின்றன. மேற்காட்டிய நல்லொழுக்கங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/271&oldid=1587378" இலிருந்து மீள்விக்கப்பட்டது