உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271

14. விநாயகக் கடவுளைப் பற்றிய கதைகளின் பொய்ம்மை

L

இனி, மூத்த பிள்ளையாராகிய விநாயகக் கடவுளைப் பற்றிக் கட்டிவைத்திருக்குங் கதைகளின் குழறு படைகளையும் அவைகள் சைவத்துக்கு முற்றும் மாறாயிருத்தலையும் அன்பர் கள் ஆராய்ந்து அறிந்து கொள்ளல் வேண்டும். அவை யெல்லாம் இங்கு முற்றுமெடுத்துக் காட்டுதல் இயலாது. யினும், அன்பர்கள் அன்பர்கள் எமது சொல்லின் உண்மையை உணரும்பொருட்டு ஒருசில இங்கு எடுத்துக்காட்டுதும். ஆறறிவு உடை உடைய மக்களின் மன உணர்வு மேன்மேல் விளங்கி எல்லையற்ற இன்பத்தைத் தருதற்கு ஒரு பெருங் கருவி யாயிருப்பது ஒலிகளின் றொகுதி யாகிய தமிழ் ஆங்கிலம் முதலான மொழிகளேயாகும். இம் மொழிகளாகிய கருவிகளே இல்லாவிட்டால் ஒருவர் தாம் எண்ணிய எண்ணங்களைப் பிறர்க்குத் தெளிவாகத் தெரிவிப் பதும், பிறரறிந்தவைகளைத் தாம் தெளிய அறிந்து அறிவு விளங்கப் பெறுதலுந் தினைத் தனையுங் கைகூடா. ஆகவே, மக்களின் அறிவு வளர்ச்சி முழுதும் மொழிகளின் வாயிலாகவே நடைபெறுகின்றதென்று ஓர்ந்து கொள்ளல் வேண்டும். இத்துணையின்றியமையா தனவான ஒலிகளின் தோற்றமும் இயக்கமும் நம் உடம் பினகத்தும் அதன் புறத்துங் கடவுள் அமைத்திருக்கும் மிக வியப்பான அமைப்புகளினாலேயே நடைபெறுகின்றன. நமது மூளையில் ஒரு கடுகளவு பகுதி பழுது பட்டாலும், அல்லது தொண்டைக் குழாயில் அமைந்த அமைப்புச் சிறிது பழுது பட்டாலும், அன்றி நமது செவியினுட் சமைந்த நுண்ணிய அமைவுகள் சிறிது சீர் குலைந்தாலும் நாம் சொற்களைப் பேசவும் பிறர் பேசியவைகளைக் கேட்கவும் வலியற்றவர்களாய் விடுவமல்லமோ! ஆக, ஒலியின் தோற்ற இயக்கங்களின்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/304&oldid=1587411" இலிருந்து மீள்விக்கப்பட்டது