உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மறைமலையம் – 21

அமைப்புகள் அத்தனையும் இறைவனால் வகுக்கப்பட்டிருத் தலானும், புறத்தும் அகத்தும் நிகழும் ஒலியின் றோற்ற இயக்கங்கள் எல்லாம் இறைவன் அருளாலன்றி நிகழப் பெறாமையானும், இறைவனுக்கு ஒலி அல்லது பிரணவமும் ஒரு வடிவெனச் சைவ சித்தாந்த நூல்கள் நுவலாநிற்கும். எல்லா ஓசைகளுக்கும் எல்லா ஒலிகளுக்கும் முதலோசையாய் நிற்பது

என்று இரையும் ஒலியேயாகும். இங்ஙனம் இயற்கையாய் நிகழும் இவ்வொலியினைக் காதிற் கையை வைத்து அடைத்த லாலுஞ், சங்கைக் காதில் வைத்து உணர்தலாலுங், கடலொலி யினை உற்றுக் கேட்டலாலும் எவரும் நன்கறியலாம். இவ்வாறு எல்லா ஓசைக்கும் முதலோசையாய் நிகழும் இவ் வோங்கார ஒலி இடைவெளியிலுள்ள அணுக்களின் இயக்கத்தால் உண்டாவதாகும். அணுக்களோ புள்ளி வடிவின வாகும். அவ்வணுக் களின் இயக்கமோ ஒரு வரி வடிவின தாகும். இங்ஙனம் புள்ளியும் வரியுஞ் சேர்ந்த சேர்க்கையே, பிள்ளையார் சுழி எனவும், வரியை வளைத்தெழுதி ஓங்கார எழுத்தெனவுங் கொள்ளப்படா நிற்கின்றது. இங்ஙனம் வட்டமும் வரியுங் கூடிய அமைப்பே சிவலிங்கமெனவும் நுவலப்படுகின்றது. யானையின் முகமும் அம் முகத்திலிருந்து தொங்குந் தும்பிக்கையும் வட்ட வடிவும் வரிவடிவுஞ் சேர்ந்த ஓகாரவடிவாயிருத்தலின், அவ் ஒலிவடிவில் நிற்குங் கடவுளை யானைமுக முடையராக வைத்து அறிவு நூல்கள் கூறா நிற்கின்றன. நல்ல பாம்பின் படம் வட்ட வடி வாயும் அதன் உடம்பு நீண்ட வரிவடிவாயும் இருத்தல் பற்றி நமதுடம் பினகத்தே நிகழும் இவ்வோங்கார ஓசையின் இயக்கத்தைப் பாம்பாட்டமென்று சிவராச யோக நூல்கள் புகலா நிற்கும். இறைவன் பாம்பை அணிகலனாய்ப் பூண்டன னென்பதும், அவன் பாம்பின் மேற் பள்ளி கொண்டன னென்பதும், அவன் ஓங்கார வடிவினனாய் இருக்கின்றான் என்பதனையே அறிவுறுத்துவனவாகும். இவ்வாறெல்லாம் ஓங்காரவடிவின் மேன்மையும் பயனும் உணர்ந்த சான்றோர்கள், அவ் வடிவின் கண் இறைவனை வைத்து எளிதாக வழிபட்டு உய்தற்பொருட் டாகவே யானைமுகமுடைய பிள்ளையார் வழிபாட்ட

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/305&oldid=1587412" இலிருந்து மீள்விக்கப்பட்டது