உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273

  • கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா உண்டாக்கினார்கள். இவ்வளவிற் கடவுளிலக்க ணத்துக்கு கடவுளிலக்கணத்துக்கு மாறான தொன்றும் பிள்ளையார் வணக்கத்திற் காணப்பட

வில்லை.

L

ஆனாற், பின்வந்தவர்களோ மெய்யுணர்வுக்கு இ டமாகிய இதனை அறிவுடையோர் அருவருக்கத் தக்கதான ஒரு கதை வடிவிற் கட்டி விட்டார்கள். யாங்ஙனமெனிற் கூறுதும்: திருக்கைலாயத்தின்கட் சிவபிரானும் அம்மையும் மகிழ்ச்சி யோடு அமர்ந்திருக்கையிற், கோயிலின் ஒரு பக்கத்துச் சுவரில் ஆண் பெண் யானைகளின் வடிவங்கள் தீட்டப்ட்டிருந்தனவாம். அவற்றைப் பார்த்ததும் அவ்வியானை வடிவெடுத்து அம்மை யைப் புணர வேண்டுமென்னுங் காம விருப்பம் இறைவனுக்கு உண்டாயிற்றாம். அக் குறிப்பினைத் தெரிந்து கொண்ட அம்மையார்

6

னே ஒரு

பெண்யானை வடி

வடுக்க, இறைவனும் ஓர் ஆண் யானை வடிவெடுத்து அவளைப் புணர்ந்தனனாம். அப் புணர்ச்சி முடிவில் யானை முகமுடைய பிள்ளையார் பிறந்தனராம். இவ்வாறு கந்த புராணத்தின்கட் சொல்லப்பட்டது. பாருங்கள் அறிஞர்களே! உணர்ந்து பார்க்கும் எந்த உண்மைச் சைவர்க்கேனும் இக் கதை அருவருப் பினையும் மானக் குறைவினையும் விளைவியாது ஒழியுமோ? மக்களுள்ளும் இழிந்தவர் செய்யாத இக் காமச் செயலினை இறைவன் செய்தானென்பது எவ்வளவு அடா தாயிருக்கின்றது! தேவவடிவில் நின்று புணருமின்பத்தை விட, இழிந்த விலங்கு வடிவில் நின்று புணருமின்பம் சிறந்ததென்று கூற எவரேனும் ஒருப்படுவரோ? அத்தகைய இழிந்த காம ன்பத்தினை இறைவன் விரும்பினானென்றால், பேரின்ப உருவாயே நிற்குங் கடவுளிலக்கணத்துக்கு எவ்வளவு மாறு பட்டதாய், எவ்வளவு தகாததாய், எவ்வளவு பழிக்கத்தக்கதாய் இருக்கின்றது! உணர்ந்து பார்மின்கள்! இக் கதை, விலங்கின் புணர்ச்சியைக் கண்டு வரம்பு கடந்து காமங்கொண்ட ஒரிழிந்த ஆரியனால் வடமொழியிற் கட்டப்பட்டு வழக்கத்தில் வந்துவிட்டது. திருஞானசம்பந்தப் பெருமானுங்கூட இக் கதையைப்,

“பிடியதன் உரு உமைகொள மிகு கரியது வடிகொடு தனதுஅடி வழிபடும் அவரிடர் கடி கணபதி வர அருளினன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/306&oldid=1587413" இலிருந்து மீள்விக்கப்பட்டது