உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

❖ - * மறைமலையம் – 21

என்று தாமருளிய அருமைத் திருப்பதிகத்தில் அமைத்துப் பாடியிருக்கின்றார். அற்றேல், ஓதாதுணர்ந்த இப்பெருமானும் இவ் அருவருப்பான கதையைத் தழுவிப் பாடியது குற்றமன்றோ வெனிற், குற்றமன்று. புள்ளி வடிவான விந்துவும் வரிவடிவமான நாதமும் சேர்ந்த ஒலியின் சேர்க்கையை இழிந்தவனான ஆரிய னொருவன் யானையின் புணர்ச்சியில் வைத்துக் கட்டி விட்டா க் னாயினும், உயர்ந்தோனாகிய ஞானசம்பந்தப் பெருமானுக்கு அக் கதையின் மேற்பரப்பிலிருந்த அருவருப்பின் கட் கருத்துச் செல்லாதாய், அதன் கட்பொதிந்து கிடந்த உயர்ந்த உண்மை யிலேயே கருத்துச் சென்றமையின் அவன் அதனைத் தழுவிப் பாடுவானாயினன். இவ்வாற்றால், உயர்ந்தோனுக்கு இழிந்த வற்றிலும் உட் பொதிந்த உயர்ந்த உண்மையிலேயே நாட்டஞ் செல்லுமென்பதூஉம், இழிந்தோ னொருவனுக்கோ உயர்ந்த வற்றிலும் இழிந்த பொருளே தோன்றுமென்பதூஉம், இனிது அறியக் கிடக்கின்றன. உலகத்தின்கண் நிகழும் இழிந்த நிகழ்ச்சி களை ஓர் உயர்ந்தோன்பால எத்துணைமுறை எடுத்துச் சொல்லினும், அவன் அந் நிகழ்ச்சிகளில் உயர்ந்தவற்றையே ஆராய்ந்து கொண்டு நிற்பன். மற்று, இழிந்தவனோ உயர்ந்த நிகழ்ச்சிகளைப் பலமுறை காணினும், அவற்றின்கண் எல்லாம் இழிந்தவற்றையே எடுத்து ஆராய்ந்து கொண்டிருப்பன். இவ்விரு வேறு நாட்டங்களும் அவரவர் உயர் விழிவிற்கேற்ப நடைபெறு வனவாகும். ஞானசம்பந்தப் பெருமான் உலகத்து இழிபுகளைச் சிறிதுமே உணராத தூய உள்ள முடையோ னாதலால், அவன் தன்காலத்து வழங்கிய இக்கதையின் மேலுள்ள இழிவினைக் காணாது, அதன்கண் ஊடுருவி நிற்கும் விந்துநாத உண்மை யினையே கண்டு பாடியருளினன் என உய்த்துணர்ந்து கொள்க.

இனிப், பிள்ளையார் பிறப்பினைக் கூறுங் கதைகள் இன்னும் அருவருக்கத் தக்கனவாய்க், கடவுளிலக்கணத்திற்குப் பெரிதும் மாறுகொண்டனவாய் நிற்கின்றன. அவற்றுள் இரண்டு கதைகளை இங்கு எடுத்துக் காட்டுவாம்: ஒரு காலத்தில் அம்மையார்க்கு மூத்தபிள்ளையார் ஒருவர் பிறந்தனராம். அப்பிள்ளையைக் காணும் பொருட்டுத் தேவர் களெல்லாரும் அங்கு வந்தனராம். வந்த அவருட் சனியனெனுந் தேவனும் ஒருவனாம். இச் சனியன் தான் அப்பிள்ளையப் பார்த்தால் அதற்குத் தீதுண்டாகுமென்று மன்று நினைந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/307&oldid=1587414" இலிருந்து மீள்விக்கப்பட்டது