உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275

  • கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா தலைகுனிந்து அதனைப் பாராதிருக்க அவன் கருத்தறியாது அம்மை அவன் தன்மகவினைப் பாராது இகழ்ந்தன னென்று சினங்கொள்ள, அதற்கஞ்சி அவன் அப் பிள்ளையைப் பார்த்தனனாம். பார்த்த உடனே, அப்பிள்ளையின் தலை எரிந்து சாம்பலாய் போயிற்றாம். ஐயோ! அதனைக் கண்டதும் ஆற்றாமை மிகப் பெற்ற உமையம்மையார் அச் சனியன்மேல் மிகுந்த சினங்கொளல் ஆயினராம். அது கண்ட நான்முகன் முதலான தேவர்களெல்லாரும் அம்மையை வேண்டி அவனை மன்னிக்கும்படி அவனுக்காகப் பரிந்து பேசினராம். அதன்மேற் சிவபிரானும் அம்மையின் சினத்தைத் தணிவித்து வடக்கு நோக்கிப் படுத்திருக்கும் ஒரு யானையின் றலையை வெட்டிக் கொணரும்படி தேவர்களுக்குக் கட்டளையிட, அவர்களும் அவ்வாறே சென்று ஓர் யானையின் தலையைக் கொண்டுவர, அத் தலையை அப் பிள்ளையின் முண்டத்திற் பொருத்தி அதனை உயிர்பெற்றெழச் செய்தனராம். அதுமுதற்றான் பிள்ளையார்க்கு யானைமுகம் உண்டாயிற்றென்பது ஒரு கதை. இங்ஙனமாக இக்கதை ‘பிரமவைவர்த்த புராணத்தின்கட் சொல்லப்பட்டது.

இக் கதையின்கண் உள்ள மாறுபாடு களையும் இழிவுகளையும் ஒரு சிறிது உற்று நோக்குமின்கள் அன்பர்களே! எல்லாம்வல்ல சிவபிரானுக்கும் அம்மைக்கும் ஒரு பிள்ளை பிறந்ததென்றால், அஃது எவ்வளவு தெய்வத் தன்மையும் எவ்வளவு பேராற்றலும் உடையதாயிருக்க வேண்டும்! அத் துணைச் சிறந்த தெய்வப் பிள்ளையைச் சனியன் என்னும் ஓர் இழிந்த தேவன் நோக்கின உடனே அதன் தலை எரிந்து சாம்ப ராய்ப் போயிற்றென்றால் அப்பிள்ளை தெய்வத் தன்மையுடைய தாகுமோ கூர்ந்து பாருங்கள்!மேலும், அத் தெய்வப் பிள்ளையை விடச் சனியன்றோ வல்லமையிற் சிறந்த பெருந் தெய்வமாய் விடுகின்றான்? அதுவேயுமன்றி, முழுமுதற் கடவுளான அம்மையப்பர் தம் பிள்ளையைப் பார்த்த சனியனின் பார்வைக் கொடுமையைத் தடை செய்ய மாட்டாமற் போயின ரென்றால், அச் சனியனல்லனோ அவர் களிலும் மேலான தெய்வமாய் விடுகின்றான்? அல்லாமலும், சனியனின் பார்வையால் எரிந்து போன தம் பிள்ளையின் தலையை மீண்டும் உண்டாக்கிக் கொள்ளும் ஆற்றல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/308&oldid=1587415" இலிருந்து மீள்விக்கப்பட்டது