உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

மறைமலையம் – 21

அம்மையப்பர்க்கு சொல்லல்வேண்டும்? அது வல்லாமலும், அழகிற் சிறந்த தேவவடிவங்களின் தலைகளெல்லாமிருக்க, அவை தம்மை யெல்லாம் விட்டு அழகற்ற ஓர் யானையின் தலையை வெட்டிக் கொணர்வித்துப் பொருத்தினானென்பது கடவுளின் இறைமைத் தன்மைக்கு இழுக்கன்றோ? இத்துணை மாறு பாடுகளும் இத்துணை இழிபுகளும் இத்துணைப் பொல்லாங்கு களும் நிறைந்த இப் பொல்லாத கதையை நம்புவோ னெவனும் உண்மைச் சைவ னாவனோ சொன் மின்கள்! ஆழ்ந்து பார்க்குங்கால் எல்லாத் தேவர்களினும் மேலாகச் சனியனைக் கொண்டாடி அவனை உயர்த்துதற்கு விரும்பிய ஓர் ஆரியப் பார்பனனே இக்கதையைக் கட்டிவிட்டு எல்லாம்வல்ல சிவ பெருமானையும் உண்மையிற் சிறந்த சைவ சமயத்தையும் இழிவு படுத்தி விட்டானென்பது உங்களுக்குப் புலப்பட வில்லையா? இவ்வாறு சைவத்துக்கும் சிவபிரான் றன் முழுமுதற் றன்மைக்கும் முழுமாறான பொல்லாக் கதைகளை நம்ப வேண்டாமென்னும் எமது அறிவுரையினைக் கண்டு குறைகூறுங் குருட்டுச் சைவர் களே உண்மைச் சைவத்துக்குப் பெரும்பகைவர்களென்று தெரிந்து கொண்மின்கள்!

ல்லாது போயிற் றென்றன்றோ

னிப் பிள்ளையார் பிறப்பு 'சிவமகாபுரணத்'தின் கண் வேறொரு வகையாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அதனையும் அதன் மாறுகோளினையும் இங்கு ஒருசிறிது காட்டுதும். ஒருகால் உமையம்மையார் குளிக்கப் போயினராம். போகுமுன் தமது உடம்பிலுள்ள அழுக்கையெல்லாந் திரட்டி எடுத்து, அதனைத் தமது கையாற் பிடித்துத் தமது குளியலறையின் முன்வாயிலில் வைத்துச், 'சிவபிரான் வந்தனராயின் அவரை உள்ளேவிடாது தடை செய்க' என்று கட்டளையிட்டுத், தாம் உள்ளே குளிக்கச் சென்றனராம். பிடித்து வைக்கப்பட்ட அவ்வழுக்குத் திரளை உடனே உயிருள்ள பிள்ளையாராகி,. அக்குளியல றையின் வாயிலிற் காவலாய் இருந்தததாம். இருக்கச் சிவபிரான் அம்மையைத் தேடிக் காண்டு அங்குவந்தனராம். அவரைக் கண்டதும் அவ் வழுக்குப் பிள்ளையார் அவரை உள்ளே போகவேண்டா ா மெனத் தடைசெய்ய இருவர்க்கும் போர் மூண்டதாம். நெடுநேரம் பேராடிக் கடைசியாகச் சிவபிரான் அப்பிள்ளை

அங்ஙனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/309&oldid=1587416" இலிருந்து மீள்விக்கப்பட்டது