உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

277

அப்போது

யாரின் தலையை வெட்டிவிட்டனராம். உள்ளிருந்து வந்த உமையம்மையார் 'ஐயோ! என் பிள்ளையை வெட்டிவிட்டனரே!' என்று கரைந்து ஆற்றாமல் அழுதனராம். அது கண்ட சிவபிரான் தாமும் ஆற்றாதவராகி ‘நம் பிள்ளை என்று அறியாமல் இவனை வெட்டிவிட்டேன். ஆயினும் நீ வருந்தாதே. இப்போது இதனை உயிர்பெற் றெழச் செய்வம்’ என ஆறுதல் மொழிந்து, வடக்கு நோக்கிப் படுத்திருந்த ரு யானையின் தலையை வெட்டிக் கொணர்வித்து அதனை வெட்டுண்ட அப்பிள்ளையின் உடம்பிற் பொருத்தி உயிர் பெற்றெழச் செய்தனராம். அங்ஙனம் எழுந்த பிள்ளையாரே விநாயகக் கடவுளாம். அன்பர்களே! இக்கதை எவ்வளவு அருவருக்கற் பாலவான மாறுபாடுகள் நிறைந்ததாய் இருக் கின்றது! எல்லாம் வல்ல இறைவியான உமைப் பிராட்டியார், வினைவயத்தாற் பிறக்கும் நம்போல் ஊனுடம்பு உடையரல்லர்; அவர்தம் திருமேனி சொல்லொணா அருளொளி வீசித் துலங்குவதென்று 'கேனோப நிடதம்’ நன்கெடுத்து மொழியா நிற்க, அவ் வறிவு நூலுக்குங் கடவுளிலக்கணத்துக்கும் முற்றும் மாறாக அம்மையார் திருமேனியில் அழுக்கு நிரம்பி இருந்த தென்றும், அவ் வழுக்கினைத் திரட்டி எடுத்துப் பிள்ளை யாரைச் சமைத்தன ளென்றுங் கூறும் அழுக்குப்புராணம் 'சிவமகா புராண' மெனப் பெயர் பெறுதற்குத் தகுதியுடைய தாமோ? ஆராய்ந்து கூறுமின்கள்! ஊனுடம்பு படைத்த மக்களுள்ளும் அழகும் நாகரிமுந் தூய்மையும் வாய்ந்தார் சிலரின் உடம்புகள் அழுக்கில்லாதனவாய் மினுமினு வென்று மிளிராநிற்கத், தூய அருட்பேரொளிவடிவாய் விளங்கும் அம்மையின் திருமேனி ‘அழுக்குடையாதாயிருக்குமோ? சொன்மின்கள்! மேலுந், தம் மனைவியரைத் தேடிக் கொண்டு வந்த சிவபிரான், தமக்குப் பிள்ளையென்று அறியாமல் அதன் தலையை வெட்டி விட்டன ரென்பது கடவுளிலக்கணத்துக்கு எவ்வளவு முரண்பட்டதாய் இருக்கின்றது. எல்லா உயிர்க்கு முயிராய்,. எல்லார் அறிவுக்கு மறிவாய் எல்லா உலகங்களிலும் எல்லாக் காலங்களிலும் நிகழும் நிகழ்ச்சிகளை யெல்லாம் ஒருங்கே உணரும் பெருமான் தம் பிள்ளையைத் தாமே அறியாமல் வெட்டினரென்றால் அஃது அறிவுடையோரால் ஒப்பத்தகுந்ததாமோ? இன்னும் பாருங்கள்! வெட்டுண்ட

D

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/310&oldid=1587417" இலிருந்து மீள்விக்கப்பட்டது