உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

மறைமலையம் – 21

பிள்ளையைத் தலையும் உடம்பும் பொருத்தி உயிரோடு எழுப்பிவிடலாகாதா? லாகாதா? வெட்டுண்ட வெட்டுண்ட தலையை விடுத்து வேறோர் யானைத் தலையை வருவித்துப் பொருத்தின ரென்பது எவ்வளவு தகாத செயலாய் இருக்கின்றது!' இத்துணைத் தகாததொன்றை இறைவன் செய்தனனென்பது கடவுளிலக் கணத்துக்கு அடுக்கு மா? உண்மையான் நோக்குங் காற், சிவபிரானையும் அருள் வடிவான பிராட்டியையும் ஓங்கார ஒலிவடிவில் விளங்கும் இறைவனையும் இழித்துப் பேச விரும்பின எவனோ ஓர் ஆரியப் பார்ப்பனன் கதையைச் சிவமகா புராணம் என்னும் பெயராற் கட்டி விட்டனன் என்பது வெள்ளிடைமலைபோல் விளங்கா நிற்கும். இப் பொல்லாத பார்ப்பனச் சூழ்ச்சியினை ஆராய்ந்து பார்க்கும் அறிவு மதுகை இல்லாத குருட்டுச் சைவர்கள் இவ் வழுக்குப் புராணத்தைச் சிவமகாபுராணமெனக் கொண் டாடிச் சைவ சமயத்துக்குக் கேடு சூழ்வது பெரிதும் வருந்தற்பாலதாயிருக்கின்றது. அதுநிற்க.

க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/311&oldid=1587418" இலிருந்து மீள்விக்கப்பட்டது